ADVERTISEMENT

UAE கொரோனா அப்டேட் (மே 17, 2020) ..!! பாதிக்கப்பட்டோர் 731 பேர்..!! 6 பேர் உயிரிழப்பு..!! மொத்த எண்ணிக்கை 23,358 பேர்..!!

Published: 17 May 2020, 10:38 AM |
Updated: 17 May 2020, 10:38 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, மே 17,2020) புதிதாக 731 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 23,358 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக 6 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 581 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 8,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT