ADVERTISEMENT

அமீரகத்தில் தனியார் துறைகளுக்கான ஈத் விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!!

Published: 13 May 2020, 10:46 AM |
Updated: 13 May 2020, 10:58 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேட்டிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation,MOHRE), அமீரகத்தில் இருக்கும் தனியார் துறைகளுக்கான ஈத் விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. பொதுத்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களை போலவே, தனியார் துறை ஊழியர்களுக்கும் ரமலான் மாதம் 29 முதல் ஷவ்வால் மாதம் 3 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, மே மாதம் 22 ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

இருப்பினும், சரியான தேதிகள் பிறை பார்ப்பதன் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரமலான் மாதம் 30 நாட்களாக நிறைவடையும் பட்சத்தில் 5 நாட்கள் விடுமுறையாகவும், 29 நாட்களாக நிறைவடையும் பட்சத்தில் 4 நாட்கள் விடுமுறையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT