ADVERTISEMENT

வெளிநாடுகளில் இருக்கும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் ஜூன் 1 முதல் நாடு திரும்பலாம்..!! அமீரக அரசு அறிவிப்பு..!!

Published: 19 May 2020, 6:59 AM |
Updated: 19 May 2020, 9:36 AM |
Posted By: jesmi

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல நாடுகளால் விதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து தடை காரணமாக நூற்றுக்கணக்கான ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு வர முடியாமல் தற்போது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இவ்வாறு, கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட போக்குவரத்து தடையின் காரணமாக அமீரக ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருந்து அமீரகத்திற்கு வர முடியாமல் வெளிநாடுகளில் அல்லது தங்கள் தாய்நாடுகளில் சிக்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் மீண்டும் அமீரகத்திற்கு திரும்பலாம் என ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களில் தங்கள் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று தற்போது ஏற்பட்ட போக்குவரத்து தடையினால் அமீரகத்திற்கு திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசாவை வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் ஜூன் 1 திங்கட்கிழமை முதல் அமீரகத்திற்கு திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (Ministry of Foreign Affairs and International Cooperation-MoFAIC) மற்றும் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (Federal Authority For Identity and Citizenship-ICA) அறிவித்துள்ளன. இவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு வர http://www.smartservices.ica.gov.ae/ என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் ரெசிடென்ஸ் நுழைவு அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பு சூழ்நிலைகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் அமீரகத்திற்கு வர முடியாமல் பிரிந்திருக்கும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டிற்கு வெளியே சிக்கித் தவிக்கும் அமீரக ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்களுக்கு நடைமுறைகளை எளிதாக்குவதையும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய விதிவிலக்கான சூழ்நிலைகளில் நாடு மேற்கொண்ட போக்குவரத்து தடை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பிரிந்துள்ள குடும்ப நபர்களை மீண்டும் அமீரகத்தில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருடன் ஒன்றிணைப்பதையும் நோக்கமாக கொண்டு அமீரக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது” என்று கூட்டாட்சி ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT