ADVERTISEMENT

அபுதாபிக்கும் பிற நகரத்திற்குமான இயக்க தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!! அல் அய்ன், அல் தஃப்ரா மீதான தடை நீக்கம்.!!

Published: 22 Jun 2020, 8:03 AM |
Updated: 22 Jun 2020, 8:07 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இயக்க தடையானது ஒரு வாரம் முடியவிருந்த நிலையில் மேலும் இரு வாரம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இயக்க தடையானது இன்று முடியவிருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட இருப்பதாக அபுதாபி ஊடக அலுவலகம் (Abudhabi Media Office) ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மூன்று வாரங்களாக அமலில் இருந்த இந்த இயக்க தடையானது, அபுதாபிக்கும் அபுதாபியின் எல்லைக்கு உட்பட்ட பிற நகரங்களான அல் அய்ன், அல் தஃப்ரா உட்பட அமீரகத்தின் மற்ற நகரங்களான துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் இடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அபுதாபிக்கும் அபுதாபி எல்லைக்கு உட்பட்ட பிற பகுதிகளான அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவிற்கு இடையேயான இயக்க தடை நீக்கப்படுவதாகவும், எனினும் அபுதாபிக்கும் துபாய்க்கும் இடையேயான எல்லை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்தில் இயக்க அனுமதி பெற்றவர்கள், வணிக பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை மட்டும் அபுதாபி எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 2 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த இந்த இயக்க தடையானது கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக அபுதாபியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெரிய அளவிலான தேசிய பரிசோதனை திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக அபுதாபியின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, அபுதாபி காவல்துறை மற்றும் அபுதாபி சுகாதார துறை ஒன்றிணைந்து இந்த முடிவை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT