ADVERTISEMENT

குவைத்திலிருந்து தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் நான்கு விமானங்கள்..!! நான்காம் கட்ட விமானப்பட்டியல் வெளியீடு..!!

Published: 28 Jun 2020, 2:52 PM |
Updated: 28 Jun 2020, 4:14 PM |
Posted By: jesmi

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் குவைத் நாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்து செல்லும் விமானங்களின் விபரங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

நான்காம் கட்ட அட்டவணையின்படி, ஜூலை 1 ம் தேதி முதல் குவைத்திற்கு இயக்கப்படவுள்ள 41 விமானங்களில் கேரளாவிற்கு 12 விமானங்களும் மேற்கு வங்கத்திற்கு 8 விமானங்களும் ராஜஸ்தானிற்கு 6 விமானங்களும் தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேசத்திற்கு தலா 4 விமானங்களும் குஜராத்திற்கு 2 விமானங்களும் கர்நாடகா, ஒடிஷா, தெலுங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு விமானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லும் நான்கு விமானங்களும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குவைத்திலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பயண தேதிகளின் விபரம்..

ADVERTISEMENT