ADVERTISEMENT

ஓமான் : 4 – ம் கட்டத்திற்கான விமானங்களில் பயணிக்க விரும்புவோர் புதிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்..!! இந்திய தூதரகம் அறிவிப்பு..!!

Published: 29 Jun 2020, 6:52 AM |
Updated: 29 Jun 2020, 6:55 AM |
Posted By: jesmi

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையான் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் ஓமான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு 16 விமானங்கள் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் செல்ல விரும்பும் நபர்கள் ஓமானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் புதிய விண்ணப்ப படிவத்தில் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விமானங்களில் பயணம் செல்ல விரும்புபவர்கள் ஓமானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள லிங்கில் ( docs.google.com) சென்று அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் என்ற முறையில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓமானிலிருந்து தமிழகத்திற்கு இந்த நான்காம் கட்டத்தில் 16 விமானங்களில் ஒரு விமானம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், மூன்றாம் கட்டத்தில் இந்தியாவிற்கு கூடுதலாக அறிவிக்கப்பட்ட விமானங்களில் தமிகத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒரு விமானம் இன்று ஓமானில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT