ADVERTISEMENT

WHO விற்கு 10 மில்லியன் USD மதிப்பிலான கொரோனா டெஸ்டிங் கிட்டை நன்கொடையாக வழங்கிய அமீரகம்..!!

Published: 5 Jun 2020, 6:55 AM |
Updated: 5 Jun 2020, 7:00 AM |
Posted By: jesmi

கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ள பயன்படும், சுமார் 10 மில்லியன் அமெரிக்கன் டாலர் (36.73 மில்லியன் திர்ஹம்ஸ்) மதிப்பிலான PCR கோவிட் -19 டெஸ்டிங் கிட் எனும் கொரோனா சோதனைக் கருவிகளை, WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பிற்கு நன்கொடையாக அளித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த சோதனை கருவிகள் மூலம் 500,000 நபர்களுக்கு கொரோனாவிற்கான சோதனைகள் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமீரக அரசின் இந்த நன்கொடை, கொரோனா தொற்றிற்கான சோதனை செய்ய பயன்படும் கருவிகளின் பற்றாக்குறையின் காரணமாக, பல்வேறு பின்தங்கிய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டுவரும் உலகளாவிய முயற்சிகளை ஆதரிக்கிறது எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த சோதனை கருவிகள் நன்கொடை தவிர, கொரோனாவின் பாதிப்புகளினால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பல்வேறு உலக நாடுகளுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் தனிப்பட்ட முறையில் பல மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றது. இது வரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 63 நாடுகளுக்கு 714 டன் எடையிலான மருத்துவ உதவிகளை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.