ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் 15 சதவீத வரி உயர்வு (VAT) இன்று முதல் அமல்..!!

Published: 1 Jul 2020, 10:46 AM |
Updated: 1 Jul 2020, 10:59 AM |
Posted By: jesmi

கச்சா எண்ணெய் வீழ்ச்சி மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அரசின் பொருளாதார நிதிகளை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்நாட்டில் வழங்கப்பட்டு வரும் மானியங்களை (Living Cost Allowance) நிறுத்துவதாகவும், மதிப்பு கூட்டப்பட்ட வரி (Value Added Tax,VAT) ஐ மூன்று மடங்காக ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும் எனவும் அறிவிப்பு ஒன்றை கடந்த மே மாதம் 11 ம் தேதி சவூதி அரேபியா அரசு வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

கொரோனா எதிரொலி : சவூதி அரேபியாவில் VAT 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்வு..!!

அதன்படி, சந்தைகளில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை 5 லிருந்து 15 ஆக உயர்த்த முடிவெடுத்துள்ளதாகவும், இந்த ஆணையானது வரும் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, இந்த வரி அதிகரிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

VAT ல் பதிவுசெய்துள்ள வரி செலுத்தும் அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களின் தயார்நிலையை சரிபார்க்கவும், வரி விகிதத்தை உயர்த்துவது தொடர்பான இடைக்கால விதிகள் பற்றி அறியவும், இடைக்கால விதிகள் தொடர்பான வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்யவும், சவூதி அரேபியாவின் ஜகாத் மற்றும் வருமானத்திற்கான பொது ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நிறுவனங்கள் தங்களின் விலைப்பட்டியலில் கடையின் பெயர், பொருள் வாங்கிய தேதி, வரி எண் மற்றும் VAT உள்ளிட்ட விபரங்களை குறிப்பிடவேண்டும் எனவும், இதை பின்பற்றாத விதிமீறலில் ஈடுபடும் வணிக நிறுவனங்களை gazt.gov.sa எனும் வலைத்தளத்திலோ அல்லது ஸ்மார்ட்போன்களுக்கான மொபைல் அப்ளிகேஷன் வழியாகவோ புகாரளிக்க வேண்டும் என்றும் குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் ஜகாத் மற்றும் வருமானத்திற்கான பொது ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டில் VAT விதிமுறைகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறவும், அதன் விதிமுறைகளை தெரிந்துகொள்ளவும், அதற்குரிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம் எனவும் அல்லது 19993 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணிலோ மேலும் அதன் வாடிக்கையாளர் சேவைக்கான ட்விட்டர் பக்கத்தினையோ அணுகலாம் என்றும் சவூதி அரேபியாவின் ஜகாத் மற்றும் வருமானத்திற்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.