ADVERTISEMENT

UAE: ICA போர்ட்டலில் ‘பச்சை மற்றும் சிவப்பு’ நிறத்தில் வரும் தகவல் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விளக்கம்..!!

Published: 16 Aug 2020, 9:27 AM |
Updated: 16 Aug 2020, 9:33 AM |
Posted By: jesmi

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் குடியிருப்பாளர்கள் ICA அனுமதி பெறத்தேவையில்லை என்ற கடந்த புதன் கிழமை அன்று அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) அறிவித்தன. அதனை தொடர்ந்து அமீரகத்திற்கு பயணிக்கவிருக்கும் குடியிருப்பாளர்கள் uaeentry.ica.gov.ae என்ற வலைதளத்தில் சென்று தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறும் ICA அறிவுறுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரகத்திற்கு பயணிக்க விரும்புபவர்கள் ICA குறிப்பிட்டுள்ள வலைதள பக்கத்தில் சென்று பதிவிறக்கம் செய்யும் பொழுது சில குடியிருப்பாளர்களுக்கு அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் சில குடியிருப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அமீரகத்திற்கு பயணிக்க விரும்பும் குடியிருப்பாளர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்தியாவிற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளது. அதில் அமீரகத்திற்கு பயணம் செய்ய விரும்பும் குடியிருப்பாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னர் பயண அனுமதி நிலையை பரிசோதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு தங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யும் போது பயணம் அனுமதி கொடுக்கப்படுவதாக பச்சை நிறத்தில் தகவல் வந்தால் அவர்கள் விமானத்திற்கான முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை, அனுமதி மறுக்கப்படுவதாக சிவப்பு நிறத்தில் தகவல் வந்தால் அவர்கள் தங்கள் ஸ்பான்சார்களிடம் இது குறித்து விசாரித்துக் கொள்ளுமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT