ADVERTISEMENT

UAE : Al Ain Zoo பார்வையாளர்களுக்காக நாளை முதல் மீண்டும் திறப்பு..!!

Published: 5 Aug 2020, 9:33 AM |
Updated: 5 Aug 2020, 9:41 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பினால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அல் அய்னில் அமைந்திருக்கும் அல் அய்ன் மிருகக்காட்சிசாலையானது (Al Ain Zoo) பார்வையாளர்களுக்காக நாளை (ஆகஸ்ட் 6) முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அல் அய்ன் மிருகக்காட்சிசாலையின் நிர்வாகக்குழுவானது, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரை அல் அய்ன் மிருகக்காட்சிசாலை மீண்டும் செயல்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அல் அய்ன் மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் ஜெனரல் கானிம் முபாரக் அல் ஹஜேரி அவர்கள் இது குறித்து கூறுகையில், “அமீரகத்தில் இயல்பு நிலை திரும்புவதையொட்டி அல் அய்ன் மிருகக்காட்சிசாலையானது மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும், இங்கு சுகாதார அதிகாரிகள் கூறியிருக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மீண்டும் திறக்கப்படவிருக்கும் மிருகக்காட்சி சாலையில், ஒரு நாளைக்கு 1,800 க்கும் அதிகமான பார்வையாளர்கள் மிருகக்காட்சிசாலையில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஷேக் சயீத் பாலைவன கற்றல் மையத்தின் (Sheikh Zayed Desert Learning Centre) பிரதான அரங்கம் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை முன்னிட்டு 53 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மிருகக்காட்சிசாலையின் வலைத்தளம் அல்லது அதன் அப்ளிகேஷனில் மின்னணு டிக்கெட் முன்பதிவு விருப்பத்தைப் பயன்படுத்த பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேரடியாக சென்று டிக்கெட் வாங்க விரும்புபவர்களுக்கு மிருக காட்சி சாலையில் இரண்டு டிக்கெட் கவுண்டர்களும் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிருகக்காட்சி சாலைக்கு செல்வதற்கு முன்னர் அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவுப் பகுதியில் உடல் வெப்பநிலை பரிசோதைக்கப்படும் என்றும் பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து சுகாதார நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT