ADVERTISEMENT

விமானப் பயணிகளுக்கான ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணத்தை உயர்த்திய இந்தியா..!! செப்டம்பர் முதல் அமல்..!!

Published: 21 Aug 2020, 9:35 AM |
Updated: 21 Aug 2020, 9:45 AM |
Posted By: jesmi

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வரும் செப்டம்பர் 1 முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணத்தை (Aviation Security Fee) அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

முன்னதாக உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு 150 ரூபாய் ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 160 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும், அதே போன்று சர்வதேச விமானப் பயணிகளுக்கு 4.85 டாலர் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 5.2 டாலர் (இந்திய மதிப்பில் 389.49ரூபாய்) வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணமானது பயணிகள் தங்களின் விமானப் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது விமான நிறுவனங்களின் மூலமாக வசூலிக்கப்பட்டு பின்னர் அரசாங்கத்திடம் கொடுக்கப்படும். மேலும், இந்த கட்டணமானது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த வருடமும் இதே போன்று கட்டணம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் உயர்த்தப்பட்டு, அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி முதல், உள்நாட்டு பயணிகளிடம் ரூ.130க்கு பதிலாக ரூ.150 ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணமாகவும், சர்வதேச பயணிகளுக்கு ஜூலை 1, 2019 முதல் 3.25 டாலருக்கு பதிலாக 4.85 டாலர் ஏவியேஷன் செக்யூரிட்டி கட்டணமாகவும் தற்பொழுது வரை வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT