ADVERTISEMENT

UAE : காலாவதியான விசிட் விசாக்களுக்கு ஆகஸ்ட் 11 முதல் மேலும் ஒரு மாத சலுகை காலம்..!! ICA அறிவிப்பு..!!

Published: 10 Aug 2020, 2:40 PM |
Updated: 10 Aug 2020, 2:52 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு, காலாவதியான விசிட் விசாக்களை கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஆகஸ்ட் 11 ம் தேதியில் இருந்து மேலும் ஒரு மாதம் வரையிலும் சலுகை காலம் அளிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) இன்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த மாதம் ஜூலை 10 ம் தேதி மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அமீரக அமைச்சரவை திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விசிட் விசாக்களுக்கு ஜூலை 12 ம் தேதியில் இருந்து ஒரு மாதம் சலுகை காலம் வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ம் தேதி, அமீரகத்தில் இருக்கும் காலாவதியான விசிட் விசாக்கள் வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 11 ம் தேதியில் இருந்து மேலும் ஒரு மாதம் சலுகை காலம் பெறலாம் என ICA அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்பொழுது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிவிப்பு துபாய் அரசால் வழங்கப்பட்ட விசிட் விசாக்களுக்கும் பொருந்துமா என்பது குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் இதற்கு முன்னதாக ICA அறிவித்திருந்த இந்த ஒரு மாத சலுகை காலம் துபாய் விசிட் விசாக்களுக்கு பொருந்தாது என அமர் சென்டர் (Amer Center) கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT