ADVERTISEMENT

பிற பகுதியிலிருந்து அபுதாபிக்குள் நுழைவது தொடர்பான நெறிமுறையில் மீண்டும் மாற்றம்..!! நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு..!!

Published: 4 Sep 2020, 3:24 PM |
Updated: 4 Sep 2020, 3:32 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அமீரக அரசு அதிகாரிகள் தொற்றுநோய் மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு குழுவானது அபுதாபி சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன் நாளை சனிக்கிழமை, செப்டம்பர் 5 முதல் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைய விரும்பும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் பின்பற்ற வேண்டிய திருத்தம் செய்யப்பட்ட புதிய நெறிமுறையை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி புதிய நெறிமுறையை அறிவிதித்தலிருந்து இன்று வரையிலும் அமீரக குடியிருப்பாளர்கள் அல்லது சுற்றுலாவாசிகளில், 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR சோதனை முடிவை வைத்திருப்பவர்கள் அல்லது ஆறு நாட்களுக்குள் பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டுடன் சேர்த்து நெகடிவ் DPI லேசர் டெஸ்ட் ரிசல்ட்டை பெற்றவர்கள் மட்டுமே அபுதாபிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டு வந்தனர்.

ADVERTISEMENT

ஆனால் தற்போது திருத்தும் செய்யப்பட்டுள்ள நெறிமுறையின்படி, 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் வைத்திருப்பவர்கள் அல்லது DPI லேசர் சோதனை மையத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருப்பவர்கள் அபுதாபிக்குள் நுழையலாம் என அறிவித்துள்ளது.

தற்போதய அறிவிப்பின் மூலம், ஆறு நாட்களுக்குள் பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டுடன் சேர்த்து நெகடிவ் DPI லேசர் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்ற முடிவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 50 திரஹம்ஸில் எடுக்கப்பட்ட சோதனை முடிவை கொண்டு அபுதாபிக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

மேலும் சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அபுதாபியில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ஒவ்வொரு வருகையின் ஆறாவது நாளிலும் PCR பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோவிட் -19 மருத்துவ தடுப்பூசி சோதனைகளுக்காக பங்கேற்கும் தன்னார்வலர்கள் இந்த நுழைவு நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் தங்களின் பயணத்திற்கு அவசர வாகன பாதைகளைப் (Emergency Vehicle Lane) பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.