ADVERTISEMENT

அமீரகத்தில் COVID-19 PCR ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதற்கான கட்டணத்தை குறைத்த SEHA..!!

Published: 10 Sep 2020, 3:48 PM |
Updated: 10 Sep 2020, 3:56 PM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியை மையமாக கொண்டு சுகாதார சேவைகளை வழங்கிவரும் அபுதாபி ஹெல்த் சர்வீசஸ் கோ (SEHA), கோவிட் -19 தொற்று பாதிப்பை கண்டறிய மேற்கொண்டு வரும் PCR ஸ்வாப் டெஸ்ட் எனும் கொரோனா சோதனைக்கான கட்டணத்தை 250 திர்ஹம்ஸாக குறைத்துள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து SEHA, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த டீவீட்டில், “உங்கள் வசதிக்காக, அனைத்து SEHA சோதனை மையங்களிலும் PCR ஸ்வாப் டெஸ்ட்டிற்கான கட்டணத்தை நாங்கள் குறைத்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

மேலும், “PCR சோதனை இப்போது அனைத்து SEHA சோதனை மையங்களிலும் 250 திர்ஹம்ஸ் மட்டுமே. சோதனைக்கான தள்ளுபடி SEHA வின் அனைத்து DRIVE THRU சோதனை மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் SEHA நெட்வொர்க்கில் வரும் அனைத்து கிளினிக்குகள் உள்ளிட்டவற்றிற்கும் பொருந்தும்” எனவும் தெரிவித்துள்ளது. அபுதாபி கார்னிச் மற்றும் சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி என அபுதாபி நகரத்தின் ஐந்து இடங்கள் உட்பட அமீரகம் முழுவதும் கொரோனாவிற்கான 20 திரையிடல் மையங்களை SEHA அமைத்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக PCR ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதற்கு SEHA மையங்களில் 370 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மற்றவர்களுக்கும் இந்த PCR சோதனை இலவசமாகவே வழங்கப்படும் எனவும் SEHA அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT