ADVERTISEMENT

உலகின் அனைத்திற்கும் சிறந்த இடம் இதுதான்! – தரவரிசையில் முதலிடம் பிடித்த துபாய்!

Published: 9 Jan 2023, 11:55 AM |
Updated: 9 Jan 2023, 12:07 PM |
Posted By: Menaka

2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் துபாய் உலகின் முதல் பிராந்தியமாகவும் ஐந்தாவது சிறந்த நகரமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின் முடிவில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

உலகிலுள்ள மிகப்பெரிய நகரங்களை ரிஸோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. ஒரு நகரத்தின் மீதான உள்ளூர் மற்றும் வெளியூர் பார்வையாளர்களின் மதிப்பீடு, புள்ளிவிவர செயல்திறன் மற்றும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டவர்கள் போன்ற மதிப்பீடுகளைப் பயன்படுத்தி 24 பகுதிகளில் 6 முக்கியப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, வானிலை, அடையாளங்கள், வெளிப்புற நடவடிக்கைகள் போன்றவற்றில் துபாய் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் அரேபிய பாரம்பரியம் மற்றும் ஆடம்பரமான ஷாப்பிங் போன்ற கவர்ச்சியான கலவையாக துபாய் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ரிஸோனன்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கிறிஸ் கூறுகையி்ல், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் ஆஃப் தி மியூசியம், முகமது பின் ரஷித் நூலகம், துபாய் க்ரீக், தி பாம், ஐன் துபாய், சிட்டிலேண்ட் மால், ஆரா ஸ்கைபூல், டீப் டைவ் துபாய் போன்றவை துபாயின் மிகச் சிறந்த அடையாளங்களாகவும் கவர்ந்திழுக்கும் இடங்களாகவும் திகழ்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அபுதாபி இரண்டாவது இடத்தையும், தோஹா 27 வது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் செழிப்பான நகரங்களுக்கான மதிப்பீட்டில் தோஹா முதலிடத்தையும் அபுதாபி 5வது இடத்தையும் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT