அமீரக செய்திகள்

அபுதாபி முழுவதும் வண்ணக் குறியீட்டுடன் மறுசுழற்சித் தொட்டிகள்! – குப்பைகளின் வகைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்…

அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்களை தொடக்கத்திலேயே பிரித்தெடுப்பதற்கு மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக நிறக் குறியீடுகளுடன் தொட்டிகள் அமைக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அபுதாபி (தத்வீர்) கழிவு மேலாண்மை மையம், முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளுக்கான மையத்தை நகரத்தில் தொடங்கியது. தற்போது, இதேபோன்ற தொட்டிகள் நகரத்தின் பல பகுதிகளிலும் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தத்வீர் நிறுவனத்தின் CEO அலி அல் தாஹேரி கூறுகையில், இது முன் சேகரிப்பு நடவடிக்கைகள் என்றும், தொடக்கத்திலேயே குப்பைகளைப் பிரித்தெடுக்க மக்களுக்கு பலவண்ணத் தொட்டிகள் உதவும் என்றும் கூறியுள்ளார். மேலும், இப்போது ஓரிரு இடங்களில் மட்டுமே தொட்டிகள் உள்ள நிலையில், பின்னர் படிப்படியாக அபுதாபியின் குடியிருப்புப்பகுதிகள் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, குப்பைகளின் வகைகளைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை தட்வீர் நடத்தும் என்றும் அவர் தெரவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் விவரித்ததாவது, தட்வீர் நிறுவனம்  சுமார் 14,415 டன் மருத்துவ மற்றும் அபாயகரமான கழிவுகளையும், 9,334 டன்கள் இயற்கையான முறையில் அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்த விலங்குகளின் கழிவுகளையும் மேலாண்மை செய்துள்ளது என்றார். அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் டன் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை சேகரித்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிப்பதற்காக 19 மையங்களை தத்வீர் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தத்வீரின் திட்டப்படி, தற்போது, ​​அபுதாபியில் உள்ள சில உள்ளூர் பங்குதாரர்களுடன் சேர்ந்து எரிசக்தி நிலையங்களில் சில முன்னேற்றங்களைச் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். அதன்படி, 1 மில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகளை குப்பைக் கிடங்கில் இருந்து திருப்பிவிடப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே, தத்வீர் நிறுவனத்தின் பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!