அமீரக செய்திகள்

துபாய் முனிசிபாலிட்டியின் புது முயற்சி! – பழைய பொருளை இப்படியும் உபயோகிக்கலாமா??

துபாய் முனிசிபாலிட்டி மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை சேமித்து வைக்க புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தப்படாத சரக்குக் கப்பல் கண்டெய்னர்களை மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை சேகரிக்கும் மையங்களாக மாற்றியமைத்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, பயன்படுத்தப்படாத 40 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட சரக்கு கப்பல் கண்டெய்னர்கள் மறுசீரமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த மையம் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் எடுத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகளுக்கு மத்தியில் மறுசுழற்சி விகிதங்களை உயர்த்துதல், கழிவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் முயற்சிகளை ஊக்குவித்தல் போன்ற நிலையான திட்டங்களை செயல்படுத்தும்  குடிமை அமைப்பின் முயற்சிகளுக்கு இந்த மையம் ஆதரவளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள விவரங்களின் படி, மையத்தில் சேகரிக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவை மதிப்பிடவும் ரிமோட் சென்சார்கள் ஒவ்வொரு கண்டெய்னருடனும் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது துபாய் முனிசிபாலிட்டியால் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சியால் இது போன்ற மையங்களை பல இடங்களில் அமைப்பதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும், முனிசிபாலிட்டி இந்த மையத்தை வடிவமைப்பதில், துபாய் கிளப் ஃபார் பீப்பிள் ஆஃப் டெட்டர்மினேஷன் மற்றும் சமூக மேம்பாட்டு ஆணையம் போன்ற உறுதியான நபர்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து, திட்டத்தைச் செயல்படுத்தி, அவர்களை நேரடியாகச் சென்று மையத்தின் வசதியைப் பயன்படுத்த ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Related Articles

Back to top button
error: Content is protected !!