அமீரக செய்திகள்

துபாய்: பெயர் மாற்றம் செய்யப்பட்ட மெட்ரோ ஸ்டேஷன்!! இனி பத்து ஆண்டுகளுக்கு இந்த பெயர் தான்…!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) துபாயின் ரெட்லைனில் உள்ள அல் சஃபா மெட்ரோ ஸ்டேஷன் பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் படி, அல் சஃபா மெட்ரோ ஸ்டேஷன் இனி ONPASSIVE மெட்ரோ ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் என RTA தெரிவித்துள்ளது.

அடுத்த பத்து வருடங்களுக்கு இதே பெயருடன் இந்த ஸ்டேஷன் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. பிரபல AI தொழில்நுட்ப நிறுவனமான ONPASSIVE, மெட்ரோ ஸ்டேஷனின் உரிமைகளை RTA-யிடமிருந்து பத்து ஆண்டுகளுக்கு பெற்றுள்ளதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டுக்கு முன்னர் அல் சஃபா மெட்ரோ ஸ்டேஷன் Noor Bank மெட்ரோ ஸ்டேஷன் என பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

RTAயின் CEO அப்துல் மொஹ்சென் இப்ராஹிம் கல்பட் இது குறித்து பேசுகையில், ONPASSIVE நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நகரமாக துபாயின் உயர் அடையாளத்தை வெளிப்படுத்த RTA ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வரைபடத்தில் அதன் பிராண்ட்டின் பிரபலநிலை மற்றும் இருப்பை அதிகரிப்பதற்கான முக்கிய நடவடிக்கையில் மெட்ரோ ஸ்டேஷனின் பெயரிடும் உரிமையை உலகளாவிய நிறுவனங்களில் ஒன்று எடுத்துக்கொள்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இனி மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய பெயரானது ஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் RTAயின் பொதுப் போக்குவரத்து பயன்பாடுகளிலும், ஸ்டேஷனுக்கு வருவதற்கு முன்பும் வரும்போதும் உள்ள ஆடியோ அறிவிப்புகளிலும் புதுப்பிக்கப்படும். ஸ்டேஷனில் உள்ள வெளிப்புற மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற திசை அடையாளங்களில் புதிய பெயர் மார்ச் 2023க்குள் மாற்றப்படும்.

பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ONPASSIVE இன் நிறுவனர் மற்றும் CEO அஷ்ரஃப் முஃபரே, உலகளாவிய சர்வதேச நிறுவனங்களுக்கு கவர்ச்சிமிக்க இடமாக துபாய் திகழ்வதாகப் பாராட்டியுள்ளார். மேலும் “மெட்ரோ பயணிகளுக்கு சிறந்த ஸ்மார்ட் சேவைகளை வழங்குவதன் மூலம் எங்களின் சிறந்த தரமான சேவைகளை வழங்க நாங்கள் பாடுபடுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!