அமீரக செய்திகள்

UAE: ஜபெல் ஜெய்ஸ் செல்வதற்காக திறக்கப்பட்ட புதிய சாலை… வாகன ஓட்டிகளின் பயணநேரம் 75% மிச்சம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலையான  ஜெபல் ஜெய்ஸ் செல்வதற்காக  புதிய சாலை ஒன்று திறக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை  ராஸ் அல் கைமாவின் பொது சேவைகள் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, புதிய சாலையானது ரிங் ரோட்டிலிருந்து வாடி ஹகீல் (Wadi Haqeel) பகுதி வழியாக சென்று எமிரேட்ஸ் சாலை வரை இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய 8.6-கிலோமீட்டர் சாலையானது பழைய வழித்தடமான வாடி அல் பீஹ்ஹுடன் (Wadi Al Beeh) ஒப்பிடும்போது வாகன ஓட்டிகளுக்கு 75 சதவீதம் பயண நேரத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுத் துறையின் அறிவிப்பின்படி, சாலை முழுவதும் LED விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் ரைடர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பான வழித்தடமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சாலைக்கான  கட்டுமானத்தின் போது  சுமார் 2.6 மில்லியன் கன மீட்டர் பாறைகள் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் பொதுச்சேவைத் துறை தெரிவித்துள்ளது.  இதன்படி, மலைக்கு  வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகளவிலான நன்மைகளை வழங்கவும், அமீரகத்தின் நகர்ப்புற விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தவும் ராஸ் அல் கைமா குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

இது குறித்து கூறுகையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1.13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளதாக ராஸ் அல் கைமா தெரிவித்துள்ளது. மேலும் நாட்டிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் இடங்களில் ஒன்றாக ஜெபெல் ஜெய்ஸ் மலை  உள்ளது. எனவே, இப்பகுதியில் புதிய சாலையினால் சுற்றுலாத்துறை  மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!