ADVERTISEMENT

வாகன ஓட்டிகள் கவனம்: துபாயின் முக்கிய சாலைகளில் கால தாமதம் ஏற்படும்.. RTA தகவல்..

Published: 20 Jan 2023, 7:28 PM |
Updated: 20 Jan 2023, 7:40 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) போக்குவரத்து நெரிசல் குறித்த அறிவிப்பு ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதன்படி, கோகோ கோலா அரங்கில் (Cocola arena) நடைபெறும் நிகழ்ச்சிகளால் துபாயின் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து தாமதம் ஏற்படலாம் என்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இன்றிரவு அரங்கில் பிரபல பாலிவுட் பாடகர் அரிஜித் சிங் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருப்பதால் அல் சஃபா ஸ்ட்ரீட், அல் படா ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சயீத் சாலை, பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட்டை சந்திக்கும் இடத்தில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அல் வாசல் செயின்ட், அல் மெய்டன் செயின்ட் மற்றும் அல் கைல் சாலை போன்ற மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர கோகோ கோலா அரங்கில் (Cocola arena) நிகழ்ச்சி அல்லது அப்பகுதியில் மற்ற நிகழ்வுகளுக்குச் செல்பவர்கள் துபாய் மெட்ரோவைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

ADVERTISEMENT