அமீரக செய்திகள்

UAE: உங்கள் அன்புக்குரியவர்களை தொடர்பு கொள்ள டவுன்லோட் செய்ய வேண்டிய 7 இலவச மற்றும் கட்டண ஆப்கள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் சொந்தநாடுகளில் உள்ள தங்களின் அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்பு கொள்ள பெரும்பாலும் இலவசமான வீடியோ கால் மற்றும் வீடியோ கால் ஆப்களை நம்பியுள்ளனர்.

வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) தொழில்நுட்பம் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் போன்றவற்றை செய்யலாம். அதுபோல, வளைகுடா பிராந்தியத்தில், இலவச ஆடியோ மற்றும் வீடியோ கால் செயலியை அணுக VPN நெட்வொர்க் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமீரக சட்டத்தின்படி, VPN நெட்வொர்க்கினை தவறாகப் பயன்படுத்தினால் 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அமீரகத்தின் டெலிகாம் சேவை வழங்குநர்களான Etisalat மற்றும் du ஆகியவை GoChat, Botim மற்றும் Voico ஆகியவற்றிற்கான தினசரி மற்றும் மாதாந்திர நெட்வொர்க் அழைப்புக்கான திட்டங்களை நாளொன்றுக்கு 5 திர்ஹம் முதல் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், குடியிருப்பாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்வதற்கான இலவச மற்றும் கட்டண முறையிலான ஆப்களின் பட்டியல் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

GoChat:

Etisalat UAE ஆல் அறிமுகம் செய்யப்பட்ட GoChat Messenger என்ற இலவச செயலியை, உலகம் முழுவதும் உள்ள அனைவரும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாதனங்களில் இருந்து டவுன்லோட் செய்யலாம். மேலும், இதில் பதிவு செய்ய மொபைல் எண் மட்டுமே தேவைப்படும். அத்துடன், அமீரகத்தில் குடியிருப்பவர்கள் பணத்தை அனுப்பவும், பில்களை செலுத்தவும், கேம்களை விளையாடவும் மற்றும் உணவை ஆர்டர் செய்யவும் இந்த ஆப் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தாமல் GoChat மூலம் 250 மற்றும் 1,500 சர்வதேச நிமிடங்களுக்கு அழைப்புகளில் பேச முறையே 50 திர்ஹம் மற்றும் 99 திர்ஹம் ஆகிய இரண்டு பேக்கேஜ்களையும் Etisalat வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

Botim:

இந்த ஆப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் மட்டுமில்லாமல், கூடுதலாக புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெஸ்சேஜ், லொக்கேஷன், SMS, தொடர்புகள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன், சுமார் 500 பயனர்களுடன் குரூப் சாட் (Group Chat) செய்யவும் இது அனுமதிக்கும் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

Voico:

அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தாய்மொழியில் சாட் (chat) செய்ய, இந்த ஆப் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும், தெளிவான ஆடியோ மற்றும் வீடியோ இணைப்பை வழங்குவதாக Etisalat உறுதியளித்துள்ளது. எனவே, மக்கள் அதை மொபைல் மற்றும் டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்யலாம். அதேசமயம், இது புகைப்படங்கள், வீடியோக்கள், GIFகள் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்களைப் பகிரவும் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Google Meet:

கொரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து, கூகுள் மீட் பயனர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது. இந்த செயலியை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் இலவசமாக பயன்படுத்த டெஸ்க்டாப், iOS மற்றும் Android சாதனங்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Microsoft Teams:

கூகுள் மீட் போலவே, மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலியும், தொற்றுநோய்க்குப் பிறகு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கான மீட்டிங்க்ஸ் இதில்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 60 நிமிடங்கள் வரை இலவச குழு சந்திப்புகளைப் பெற முடியும். அத்துடன் மிகவும் மலிவு விலையில் கட்டண பேக்கேஜ்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Skype Businesses:

Skype ஆனது அனைத்து தளங்களிலும் இலவசமாகக் கிடைப்பதால், பெரும்பாலான அமீரக வணிகங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 Zoom: 

உலகின் மிகவும் பிரபலமான ஆடியோ மற்றும் வீடியோ கால் ஆப்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். அமீரகத்தில் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் இருவரும் இதைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!