ADVERTISEMENT

UAE: மொபைலை பார்த்து கொண்டே வாகனத்தை ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்திய நபர்.. வீடியோவுடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அபுதாபி காவல்துறை!!

Published: 20 Feb 2023, 4:20 PM |
Updated: 20 Feb 2023, 4:39 PM |
Posted By: Menaka

அபிதாபி காவல்துறையானது, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, மொபைல் போன் போன்ற கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை காவல்துறை எச்சரித்துள்ளது. அத்துடன், இதுபோன்ற அலட்சிய நடத்தைகளால் ஏற்படும் அபாயங்களை நிரூபிக்க சமூக வலைதலங்களில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில், சிவப்பு நிற செடான் வகைக் காரை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டி மொபைலை உபயோகித்துக் கொண்டே வாகனத்தை இயக்கியதால் மோசமான சாலை விபத்து ஏற்படுவது பதிவாகியுள்ளது. வாகன ஓட்டி மும்முரமாக மொபைலை உபயோகிக்கும் வேளையில், போக்குவரத்து சிக்னலில் உள்ள சிவப்பு விளக்கையும் கவனிக்காமல், மற்ற வாகனங்கள் எதிர் திசையில் செல்லும் போது சாலையைக் கடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரது கார் வெள்ளை நிற SUV கார் மீது மோதி அதன் கட்டுப்பாட்டை இழந்து சுழன்று தாறுமாறாக இடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதன் முன்பக்கம் முற்றிலும் சிதைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டிராஃபிக் சிக்னல்களில் மொபைலில் கவனம் சிதறுவது, சக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அபுதாபி காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற நடத்தைகளுக்கு,அபுதாபியில் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி கவனத்தைச் சிதற விட்டு வாகனம் ஓட்டுதல் என்ற குற்றத்தின் கீழ், 800 திர்ஹம் அபராதமும் நான்கு ப்ளாக் பாயிண்டுகளும் தண்டனைகளாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது, அதைத் தாண்டிச் செல்வது மிகப் பெரிய போக்குவரத்து குற்றம் என்பதால், 1,000 திர்ஹம் அபராதமும் 12 டிராஃபிக் பிளாக் பாயிண்ட்களும் விதிக்கப்படும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், ஆறு மாதங்களுக்கு லைசன்ஸ் இடை நிறுத்தம் செய்யப்படும், மேலும் 30 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் எனவுகார், வாகனத்தை விடுவிக்க 50,000 திர்ஹம்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் வாகனத்தை விடுவிக்கத் தவறினால், அது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.