அமீரக செய்திகள்

UAE: கீழே கிடந்த 52,500 திர்ஹம்களை ஒப்படைத்த ஆசிய வெளிநாட்டினரை கௌரவித்த துபாய் காவல்துறை!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் குசைஸ் காவல் நிலையத்தின் (Al Qusais Police Station) எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து கிடைத்த 52,500 திர்ஹம்களை ஆசிய வெளிநாட்டினர் இரண்டு பேர் காவல்துறையிடம் ஒப்படைத்ததற்காக நேற்று (பிப்.27) துபாய் காவல் துறை அவர்களை கௌரவித்துள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நபில் அமீர் ஃபைரூஸ் கான் என்பவர் சுமார் 43,000 திர்ஹம்களையும், ஷெஃப்னோ சங்கனாசேரி என்ற பெண் 9,500 திர்ஹம்களையும் காவல் நிலையத்தில் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.

எனவே, அல் குசைஸ் காவல் நிலையத்தின் செயல் இயக்குநரான கர்னல் சுல்தான் அப்துல்லா அல் ஓவைஸ் அவர்கள், இருவரின் நேர்மை மற்றும் உன்னத நடவடிக்கையும் இழந்த பணத்தைத் திருப்பி ஒப்படைப்பதில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.

அத்துடன் மக்களிடையே நேர்மறையான செயல்களை அங்கீகரிப்பதில் துபாய் காவல்துறையின் ஆர்வத்தையும், துபாய் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான கூட்டாண்மையின் பங்கை செயல்படுத்துவதற்கும் இந்த மரியாதை பிரதிபலிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், துபாய் காவல் துறையின் ஆர்வத்துடன் சமூக கூட்டாண்மை மற்றும் சமூகப் பொறுப்பு என்ற கருத்தை வலுப்படுத்த இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளதாக கர்னல் அல் ஓவைஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!