ADVERTISEMENT

UAE: இரண்டு டிக்கெட் வாங்கினால் இரண்டு இலவசம்.. பிக் டிக்கெட்டின் அதிரடி அறிவிப்பு.. காதலர் தின சிறப்பு சலுகை..!!

Published: 13 Feb 2023, 4:52 PM |
Updated: 13 Feb 2023, 4:55 PM |
Posted By: Menaka

அபுதாபியில் நடத்தப்பட்டு வரும் ராஃபிள் டிராவான பிக் டிக்கெட்டின் நிர்வாக குழுவானது அதன் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட கால சலுகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இக்குழு வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டின்படி, காதலர் தின ஃபிளாஷ் விற்பனை மூலம் அதன் வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகளை திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை பிக் டிக்கெட் வழங்கவுள்ளது.

ADVERTISEMENT

இதன்படி, பிக் டிக்கெட்டின் இரண்டு ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் அனைவருக்கும், அடுத்த மாத டிராவிற்கான இரண்டு டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்கும் யாவருக்கும் கூடுதலாக ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் நிலையில், தற்பொழுது இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த மாதம் நடைபெறும் டிராவில் வெற்றி பெறும் நபர்களுக்கு 15 மில்லியன் திர்ஹம்கள் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், காதலர் தின ஃபிளாஷ் விற்பனையின் போது டிக்கெட் வாங்குபவர்கள், அடுத்து வரவிருக்கும் வாராந்திர இ-டிராவில் பங்கேற்று, 100,000 திர்ஹம்களுடன் வெளியேறும் மூன்று வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ள டிராவில் 15 மில்லியன் திர்ஹம்கள் முதல் பெரும் பரிசாகவும், 1 மில்லியன் திர்ஹம்கள் இரண்டாவது பரிசாகவும் மற்றும் அவற்றுடன் இரண்டு கூடுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் தன்வசமாக்கிக் கொள்ள நினைக்கும் நபர்கள், அடுத்த மாத குலுக்கலுக்கு, www.bigticket.ae என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கடைகளின் கவுண்டர்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT