அமீரக செய்திகள்

துபாயிலிருந்து பயணிக்க இனி பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் தேவையில்லை.. முகத்தை காட்டினால் போதும்.. புதிய போர்டிங் முறை அறிமுகம்..!!

துபாயின் விமான நிலைய பாஸ்போர்ட் விவகாரத் துறை (Airport Passport Affairs) துபாயிலிருந்து பயணிக்கும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு புதிய போர்டிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, இனிமேல் சர்வதேச விமான பயணிகள் துபாயில் இருந்து பயணிக்க பாஸ்போர்ட் அல்லது போர்டிங் பாஸ் தேவையில்லை, அதற்குப் பதிலாக புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சர்வதேச விமான பயணிகள் புதிய பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் அல்லது ஐடிகளின்றி (ID) தங்களது முகத்தைக் காட்டுவதன் மூலம் டெர்மினல் வழியாக விமானத்திற்கு செல்ல முடியும் என்று APA-யின் உதவிப் பொது இயக்குநர் மேஜர் ஜெனரல் தலால் அஹ்மத் அல் ஷாங்கிட்டி அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து மேஜர் தலால் அகமது அவர்கள் கூறுகையில், தற்போது துபாய் விமான நிலையங்களில் புதிய பயோமெட்ரிக் தொழில்நுட்பம் முக மற்றும் கருவிழி அங்கீகாரத்தின் கலவையைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த தொழில்நுட்பம் 2019 முதல் GDRFA இல் பயோமெட்ரிக் தரவுகளை பதிவு செய்துள்ள அனைத்து வெளிநாட்டவர்கள் மற்றும் எமிரேட்டிகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்கால பயணங்களுக்காக அனைத்து பயோமெட்ரிக் தகவல்களும் GDRFA அமைப்பில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமான நிலையங்களில் சர்வதேச பயணிகள் பயோமெட்ரிக் முறை மூலம் சில வினாடிகளில் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை கடக்க முடியும் என்பதும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, பாதுகாவலர் சோதனைகளின்றி பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு முறைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதும் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.

மேலும், இது துபாய் விமான நிலையங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிஸ்டங்கள், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு சேவைகளிலும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து இதுபோன்ற புதுமையான ஸ்மார்ட் சேவைகளை வழங்குவதற்கான GDRFA-துபாயின் முயற்சிகளின் ஒரு பகுதி என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்துவதன் மூலம் பயணிகள் உலகின் மிக அற்புதமான மற்றும் மெய்நிகர் பயோமெட்ரிக் பயணங்களையும் அனுபவித்து மகிழ முடியும் என்று மேஜர் தலால் அகம்மது அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் விரைவான பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுடன் ஸ்மார்ட் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!