அமீரக செய்திகள்

900 குழந்தைகளின் போலீஸ் ஆகும் கனவை நனவாக்கியுள்ள துபாய் காவல்துறை!! குழந்தைகளுக்கு நேர்மறை தாக்கத்தை உருவாக்க புதிய திட்டம்…!!

துபாயில் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற புதிய திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, துபாய் காவல்துறையில் உள்ள சமூக மகிழ்ச்சிக்கான பொதுத் துறையின் பாதுகாப்பு விழிப்புணர்வுத் துறையானது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘Fulfil A Child’s Wish’ என்ற திட்டத்தின் மூலம், இதுவரை சுமார் 952 குழந்தைகளின் விருப்பங்களை நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குழந்தைகளுக்கு ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஒரு நாள் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற அவர்களின் கனவை நிறைவேற்றவும் இந்த திட்டம் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குழந்தைகளுக்கென தனியாக தயாரிக்கப்பட்ட போலீஸ் சீருடை மாதிரியான உடைகள் மற்றும் பரிசுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகள் அதிநவீன ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷனை சுற்றிப்பார்க்கவும் வழிவகை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2020 இல் 143 குழந்தைகளுக்கும், 2021 இல் 481 குழந்தைகக்கும், கடந்த ஆண்டு 328 குழந்தைகளுக்கும் அவர்களது விருப்பங்களை அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர்.

குழந்தைகளின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவது துபாய் காவல்துறையின் ஒரு முக்கியமான முயற்சி என்றும், மேலும் நாட்டில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பின் நிரூபணம் என்றுமென்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு துறையின் இயக்குனர் புட்டி அஹ்மத் பின் தர்விஷ் அல் ஃபலாசி அவர்கள் கூறியுள்ளார்.

அத்துடன் குழந்தைகளுக்கு இந்த தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை வழங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும், சட்ட அமலாக்கத்தில் அவர்களுக்கு இருக்கும் எந்த அச்சத்தையும் போக்க உதவுவதாகவும் மற்றும் காவல்துறையின் நல்ல பிம்பத்தை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, , சமூகத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க துபாய் காவல்துறை உறுதிபூண்டுள்ளது என்றார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!