அமீரக செய்திகள்

துபாய்: குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு!! ஒவ்வொருவரும் டவுன்லோட் செய்யவேண்டிய 7 இலவச ஆப்கள்…

ட்ரிப் அட்வைசர் டிராவலர்ஸ் சாய்ஸ் 2023 (Trip advisor travellers choice 2023) விருதுகள்மூலம், துபாய் உலகின் மிக பிரபலமான இடங்களின் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துள்ளது. மேலும் துபாயில் பாதுகாப்பு, ஆரவாரமான வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா அனுபவங்கள் போன்றவை உலகளாவிய சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபாயின் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகிய அனைவரும் டவுன்லோட் செய்ய வேண்டிய 7 இலவச ஆப்களின் (Apps) பட்டியல் வெளியாகியுள்ளது. அதுபற்றி ஒவ்வொன்றாக கீழே காணலாம்.

1. UAE பாஸ்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ முதலில் டவுன்லோட் செய்ய வேண்டிய ஆப் UAE பாஸ் ஆகும். ஏனெனில், இது இங்குள்ள குடிமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான தேசிய டிஜிட்டல் அடையாளம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பயன்பாட்டில் சுயமாக கணக்கை உருவாக்கியவுடன் கிட்டத்தட்ட 10,000 க்கும் மேற்பட்ட அரசாங்க சேவைகளுக்கான அணுகலைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2. S’hail:

இந்த செயலி மூலம் டாக்ஸியை முன்பதிவு செய்வது உட்பட சில சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். துபாயில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது பயண நேரம், தூரம், புறப்பாடு,வருகை, வழித்தடம் மற்றும் கட்டணம் போன்ற விவரங்களை வழங்குகிறது. அத்துடன் மெட்ரோ, டிராம், டாக்ஸி, பேருந்து மற்றும் கடல் போக்குவரத்து போன்றவற்றில் பயணத்தை திட்டமிடவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. Nol Pay :

துபாயில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் ‘நோல் கார்டு’ மூலம் பணம் செலுத்த வேண்டும். மேலும், இந்த செயலியானது கார்டை டாப்-அப் செய்யவும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு காரை வாடகைக்கு எடுக்கும்பட்சத்தில் பொது பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தும்போது உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

4. Careem:

S’hail செயலி போலவே, Careem என்பது டாக்ஸிகளை முன்பதிவு செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றொரு பயன்பாடாகும். ஆனால், இது பரந்த அளவிலான விருப்பங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி, RTA-உரிமை பெற்ற டாக்ஸி, சொகுசு டாக்ஸி மற்றும் அருகில் கிடைக்கக்கூடிய தனியார் டாக்ஸி போன்றவற்றை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

5. Dubai Police:

மேற்கூறியபடி, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகின் பாதுகாப்பான நகரங்களில் துபாய் ஒன்றாகும். மேலும் துபாயில் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளைக் கையாள்வதற்கு ‘Tourism Police’ என்ற சிறப்புப் பிரிவை துபாய் காவல் துறை அமைத்துள்ளது.

ஆகவே, இந்த செயலி மூலம், சுற்றுலாப் பயணிகள் காவல்துறையை தொடர்புகொள்ள இயலும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பாளராக இருக்கும்பட்சத்தில் அவசரநிலையில் விரைவாகவும் எளிதாகவும் காவல்துறையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. Dubai Visit:

இந்த செயலியை துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) உருவாக்கியுள்ளது. எனவே, பயனர்கள் செயலியில் உள்ள ஸ்மார்ட் ஃபில்டர்களைப் பயன்படுத்தி எளிதாக துபாயின் முக்கிய இடங்கள் மற்றும் உணவகங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

7. Dubai Calendar:

துபாயில் நடைபெறும் பிரபலமான நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களின் தேதிகள் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, இதன் மூலம் துபாயில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் முக்கியமான நிகழ்சிகளில் ஒன்றைக் கண்டுபிடித்து பங்கேற்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!