ADVERTISEMENT

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை சேகரிக்க தன்னார்வலர்களை அழைக்கும் எமிரேட்ஸ் ரெட் கிரஸெண்ட்.. ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கில் சேரலாம்..

Published: 9 Feb 2023, 8:56 AM |
Updated: 9 Feb 2023, 10:19 AM |
Posted By: Menaka

துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் திங்கள்கிழமை முதல் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களினால் பல கட்டிடங்கள் சிதைந்ததுடன் கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் துருக்கியில் திங்கள்கிழமை வந்த நிலநடுக்கத்தால் அந்த நாடே உருக்குலைந்து போயுள்ளது.

ADVERTISEMENT

ஆகையால், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான பிரிவு மற்றும் பல அமைச்சகங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் நிவாரணப் பொருட்களை சேகரிப்பதற்கும் அசெம்பிள் செய்வதற்கும் உதவுவதற்காக “Bridges of Good” என்ற தலைப்பில் பிரச்சாரம் நடத்த உள்ளன. மேலும், பிரச்சாரத்தில் தன்னார்வலர்கள் பங்கேற்க அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பிரச்சாரமானது துபாயின் எக்ஸ்போ சிட்டியில் உள்ள அபுதாபி தேசிய கண்காட்சி மையம் (Adnec) மற்றும் துபாய் கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆரம்ப உதவி பேக்கேஜிங் மூலம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அடுத்த நாளான பிப்ரவரி 12 முதல், ERC மற்றும் அதன் கூட்டாளியான UAE மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனங்கள் நேரடியாக நன்கொடைகளை பணமாகவும் பொருளாகவும் இரண்டே வாரங்களில் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே, பிரச்சாரத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் volunteers.ae என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ஆதரவளிக்க எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் (ERC) ஆணையம், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி என்றும் தெரவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பாதிக்கப்பட்ட சிரிய மற்றும் துருக்கிய குடும்பங்களுடன் ஒற்றுமையுடன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை சேகரிக்கவும் திரட்டவும் இந்த தன்னார்வ முயற்சியை ஆதரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து சமூகத்தினரையும் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.