ADVERTISEMENT

எக்ஸ்போ சிட்டி துபாயில் தினமும் இரண்டு திரைப்படங்கள் பார்க்கலாம்… அனுமதி இலவசம்!! எப்போது முதல்?

Published: 8 Feb 2023, 12:47 PM |
Updated: 8 Feb 2023, 12:47 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எக்ஸ்போ சிட்டி துபாயில்  (Expo City Dubai) பிரம்மாண்ட திரையுடன் கூடிய திறந்தவெளி  திரையரங்கம்  அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு சென்று பொழுதுபோக்க மக்களுக்கு சிறந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. வெளியான தகவல்களின்படி, இந்த வார இறுதியில், ஜூபிலி பூங்காவில் மிகப் பிரம்மாண்டமான திரையில் எக்ஸ்போசிட்டி துபாய் திரைப்படங்களை வெளியிட உள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான திரை என்றால் கட்டணமும் அதிகமாகத்தான் இருக்கும் என்று நீங்கள் எண்ணினால் அதுதான் தவறு. ஆம், இந்த பிரம்மாண்ட திரையில் திரையிடப்படும் திரைப்படங்களை கண்டுகளிக்க அனுமதி முற்றிலும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், இந்த அரிய வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், உடனடியாக எக்ஸ்போ சிட்டியில் உள்ள ஜூபிலி பூங்காவிற்கு விரைந்து ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பூங்காவின் திறந்த புல்வெளி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், திறந்தவெளியில் நடத்தப்படுவதால் பார்வையாளர்களுக்கு குடைகளுடன் கூடிய பிக்னிக் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் திரைப்படம் என்றாலே பாப்கார்ன் என்ற ஸ்நாக்ஸ் தவிர்க்க முடியாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால், பிப்ரவரி 10 வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பாப்கார்ன், நாச்சோஸ் போன்ற பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தினமும் இரண்டு படங்கள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இது முழு குடும்பத்திற்கும் சிறந்த பொழுதுபோக்காக அமையும் வகையில்,  குழந்தைகளுக்கு ஏற்ற சிறப்பான திரைப்படங்களும் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

ADVERTISEMENT

பிப்ரவரி 10:

Toy Story 1, நேரம் – 6.30 pm

Black Panther,நேரம் – 8.30 pm

பிப்ரவரி 11 :

Finding Nemo, நேரம் – 6.30 pm

Black Panther Wakanda Forever, நேரம் – 8.30 pm

பிப்ரவரி 12:

Luca, நேரம் – 6.30 pm

Julie and Julia, நேரம் – 8.30 pm