அமீரக செய்திகள்

UAE: வேற ஃப்ளாட் மாற போறவங்க இண்டர்நெட், லேண்ட்லைன், டிவி கனெக்‌ஷனை ஈஸியாக மாற்றுவது எப்படி..??

நம்மில் பலருக்கும் புதிதாக ஒரு இடத்திற்கு இடம்பெயர்ந்து மற்றொரு வீட்டிற்கு பொருள்களை எடுத்துச் செல்லும்போது சிரமத்தை உணரும் வாய்ப்புள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுபோல, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறும்போது வீட்டில் உள்ள நெட்வொர்க் இணைப்புகள், லேண்ட்லைன் மற்றும் கேபிள்களை புதிய இடத்திற்கு மாற்றி அமைப்பதே ஒரு பெரிய வேலையாக இருக்கும்.

ஆனால் இதனை சில நிமிடங்களில் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெறுவதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Etisalat:

Etisalat வழங்கும் சேவைகளை பெறுபவர்களாக இருந்தால், நெட்வொர்க், லேண்ட்லைன் மற்றும் டிவி ஆகியவற்றை இடமாற்றம் செய்ய மூன்று வழிகளில் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது. இதனடிப்படையில், Etisalat வர்த்தக மையங்கள், எடிசலாட்டின் கட்டணமில்லா அழைப்பு மையம் (Toll free) – 101 மற்றும் My Etisalat அப்ளிகேஷன் ஆகியவற்றின் மூலம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனர்கள் இடமாற்றத்திற்கான சேவையைப் பெறுவதற்கு முன்பு அவற்றில் கேட்கப்படும் விவரங்களை வழங்க வேண்டியிருக்கும். அவை

  • புதிய குடியிருப்பின் இருப்பிடம் மற்றும் முகவரி
  • சேவைகளைத் துண்டிப்பதற்கான தேதி மற்றும் நிறுவல் தேதி (installation date) புதிய முகவரிக்கான மகானி எண்(Makani number).
  • முதலில் Apple App Store, Google Play Store அல்லது Huawei App Gallery-யிலிருந்து ‘My etisalat’ ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். புதிய கணக்கை உருவாக்கி மொபைல் திரையின் கீழே இருக்கும் ‘profile’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு, ‘Orders and Requests’ என்ற தேர்வை க்ளிக் செய்து ‘home moving’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பின்னர், புதிய வீட்டின் இருப்பிடம், முகவரி மற்றும் மாகாணி எண்ணை உள்ளிட்டு பழைய இடத்தில் சேவையை துண்டிப்பதற்கான தேதி மற்றும் புதிய இடத்திற்கான நிறுவல் தேதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்தபடியாக கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும், பிறகு, பயனர் குறிப்பிட்டுள்ள தேதியில் Etisalat டெக்னீஷியன் புதிய வீட்டிற்கு இணைப்பை அமைப்பதற்குச் செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.
  • அத்துடன் இந்த சேவைக்கு  Value Added Tax (VAT) வரியை தவிர்த்து 150 திர்ஹம்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Du:

Du பயனர்கள் இரண்டு வழிகளில் அதன் சேவைகளைப் பெற முடியும்.

  • Du இணையதளம் மூலம் – du.ae.
  • Du அப்ளிகேஷன்(App) – Apple, Android மற்றும் Huawei

இதில் பயனர்கள் சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும். அவையாவன,

  • குத்தகை ஒப்பந்தம் அல்லது உரிமைப் பத்திரத்தின் நகல் அல்லது சொத்தை சொந்தமாக வைத்திருந்தால் அதற்குரிய ஆவணம்.
  • புதிய வீட்டின் இருப்பிடம் மற்றும் முகவரி.
  • சேவைகளைத் துண்டிப்பதற்கான தேதி மற்றும் நிறுவல் தேதி (installation date)

Du அப்ளிகேஷன் மூலம் நெட்வொர்க் போன்ற வீட்டில் உள்ள இணைப்புகளை பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்:

  1. பயனர்கள் மொபைலில் Du அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர், Du கணக்கு அல்லது OTP மூலம் உள்நுழைந்து ‘ஹோம் பிளான்’ பிரிவில் உள்ள ‘ஹோம் ரிலோக்கேஷன் சர்வீஸ்’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  2. அதன்பிறகு, தகவல் படிவத்தை பூர்த்தி செய்து கோரிக்கையை சமர்ப்பித்தவுடன் தேதிகளை உறுதிப்படுத்த ஒரு கால் சென்டர் ஏஜென்ட் பயனர்களை தொடர்பு கொண்டு பேசுவார்.
  3. மேலும் பயனர் வழங்கிய தேதிகளின் அடிப்படையில் அவர்களின் முந்தைய இருப்பிடத்திலிருந்து சேவைகள் துண்டிக்கப்பட்டு புதிய வீட்டில் அமைக்கப்படும். இதற்கு  கட்டணமாக 100 திர்ஹம்கள் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு எமிரேட்டில் இருந்து வேறு எமிரேட் அல்லது வேறு ஆபரேட்டர் சேவை வழங்கும் இடத்திற்கு மாறினால், லேண்ட்லைன் மற்றும் இணைய இணைப்பை மாற்றுவதற்கு இந்த சேவையைப் பெற முடியாது. அதற்குப் பதிலாக, தற்போது பயன்படுத்தும் நடப்புக் கணக்கை ரத்து செய்து விட்டு, Etisalat அல்லது du மூலம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய இடத்திற்கு செல்லும்போது வயர்லெஸ் ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் மற்றும் கேபிள்களை புதிய இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஏனெனில் இணைப்பை உருவாக்க டெக்னீஷியன் அவற்றை பொருத்த வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நெட்வொர்க், டிவி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் முழுமையாகச் செயல்படுவதற்கு தோராயமாக 12 முதல் 24 மணிநேரம் ஆகும் என்பதால், சில நாட்களுக்கு அல்லது குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்னதாகவே இதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!