ADVERTISEMENT

அமீரக நெடுஞ்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்..!! அனிமேஷன் வீடியோ மூலம் விளக்கிய காவல்துறை..!!

Published: 21 Feb 2023, 1:20 PM |
Updated: 21 Feb 2023, 1:43 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கான பாதையில் மெதுவாக ஓட்டும் வாகன ஓட்டிகள், வேகப் பாதையில் இருந்து வெளியேறி சரியான பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலையில் இடதுபுறம் உள்ள பாதையை அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வேகத்தில் வாகனத்தை இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

எனவே, மணிக்கு 140 கிமீ வேக வரம்பு கொண்ட வாகனங்களை இயக்குவதற்கான இடப்புற பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் செல்வதைத் தவிர்க்க அபுதாபி காவல்துறை சமீபத்தில் சமூக ஊடகங்களில், ஒரு அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு வாகன ஓட்டி வேக வரம்பிற்குக் கீழே வாகனம் ஓட்டும்போது சாலையில் இடதுபுறம் உள்ள பாதையைப் பயன்படுத்துவதையும், பின்னால் இருந்து மற்றொரு வாகனம் வரும்போது, ​​ஓட்டுநர் கண்ணாடியை சரிபார்த்துவிட்டு வலதுபுறம் உள்ள பாதையில் செல்வதையும் காணலாம்.

இந்த விழிப்புணர்வு காட்சிகளின் படி, அதிகபட்ச வேக வரம்பில் செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே இடதுப்பக்க பாதையை பயன்படுத்த வேண்டும் எனவும், மெதுவாக வாகனம் ஓட்டும்போது வலது பாதையை பயன்படுத்தி பின்னால் வரக்கூடிய வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் நெடுஞ்சாலையின் இடப்பக்க பாதையானது, அவசரகால வாகனங்கள் மற்றும் முந்திச்செல்லும் வாகனங்களுக்கென்று என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, மெதுவாக செல்லும் வாகனங்கள் வேகமான பாதைகளை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, நெடுஞ்சாலையில், சீரான போக்குவரத்தை உறுதி செய்ய எப்போதும் சரியான பாதையில் செல்லுமாறு துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், விழிப்புணர்வுக் குழுவான RoadSafetyUAE நெடுஞ்சாலைகளில் இடதுபக்க பாதையில் வேகமாக செல்லும் வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளஅறிவிப்பின்படி, நெடுஞ்சாலைகளில் பின்பற்றவேண்டிய விதிமுறைகளும், அத்துடன் அவற்றை மீறினால் விதிக்கப்படும் அபராதங்களும்,தண்டனைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேகமாக செல்லும் வாகனங்களுக்கு வழிவிடத் தவறுதல்:

துபாய் காவல்துறையின்படி, நெடுஞ்சாலையின் இடப்பக்கத்தில் அனுமத்திக்கப்பட்டுள்ள அதிகபட்ச வேகத்தில் ஓட்டினாலும், அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும், மீறினால் 400 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய போக்குவரத்துச் சட்டங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க மறுத்தல்:

ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு வழி அல்லது முன்னுரிமை கொடுக்கத் தவறினால், 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு நெகட்டிவ் டிராஃபிக் பாயிண்டுகள்தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இடது பாதையில் டெயில்கேட் செய்ய முடியாது:

இடப்பக்க பாதையில், முந்திச் செல்லும் வாகனங்கள் முன்னால் உள்ள வாகனத்திலிருந்து போதுமான இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறினால், 400 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு நெகட்டிவ் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

தவறான பாதையில் செல்லுதல்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுஞ்சாலைகளில் வலதுபக்க சாலையில் அதிவேகத்தில் முந்திச் செல்வது சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஒன்றாகும். எனவே, தவறான பாதையில் முந்திச் சென்றால், 600 திர்ஹம் அபராதமும் ஆறு நெகட்டிவ் ட்ராஃபிக் பாயிண்டுகளும் தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சாலையின் ஓரத்திலிருந்து முந்திச் செல்வது:

வேகமாக செல்லக்கூடிய பாதையில் மெதுவாகச் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல, சாலையின் விளிம்பிலிருந்து முந்திச் செல்ல முயற்சி செய்தால், 1,000 திர்ஹம் அபராதமும் மற்றும் ஆறு நெகட்டிவ் ட்ராஃபிக் பாயிண்டுகளும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.