ADVERTISEMENT

கொரோனாவிற்கு பின்பு அதிகளவிளான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்த துபாய்..!!

Published: 6 Feb 2023, 6:59 PM |
Updated: 6 Feb 2023, 7:34 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET), துபாய்க்கு வருகை தந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 இல் துபாய்க்கு வந்துள்ள சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு வருடத்திலேயே இரட்டிப்பாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

DET வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் சுமார் 14.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகளும் 2021 இல் 7.28 மில்லியன் சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிந்துள்ளனர். எனவே, இந்த புள்ளி விவரங்களிலிருந்து, சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் 97 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், கொரோனா பரவலுக்கு முன்னதாக 2019 இல் துபாய்க்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 16.73 மில்லியனாக பாதிவாகியிருந்தது. மேலும் உலகளாவிய சுற்றுலாப் பயணம் 2019 ஐ விட 2022 இல் 37 சதவீதம் குறைவாக இருந்ததாக ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) சமீபத்திய தரவுகளும் தெரிவித்துள்ளன. இருப்பினும் 2022 இல் அமீரகத்திற்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விகிதமானது, Covid-19 க்கு முந்தைய பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதத்தை எட்டியிருப்பது மற்ற நாடுகளை விடவும் துபாய் முன்ணனி சுற்றுலாத்தளமாக விளங்குகிறது என்பதை உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், அமீரகத்தின் சுற்றுலா துறையை நூறு சதவீதத்துக்கும் மேலாக விரிவுபடுத்துவதை துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் பிளான் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 2031 ஆம் ஆண்டுக்குள் 40 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், எமிரேட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பை Dh450 பில்லியனாகவும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இது குறித்து கூறுகையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிகையை அதிகரிப்பதற்கான  முயற்சிகளை துபாய் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், எதிர் வரும் ஆண்டுகளில் உலகளாவிய சுற்றுலா வளர்ச்சியை துபாய் ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தரவுகளின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அமெரிக்கா 7%, வட ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதி மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தலா 5% என்ற விகிதங்களில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் பங்களித்திருப்பதாகவும் DET வெளியிட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.