ADVERTISEMENT

UAE: இனி அதிவேகம் மட்டுமல்ல.. குறிப்பிட்ட Speed Limit க்கு கீழே சென்றாலும் அபராதம்.. ஏப்ரல் முதல் அமல்..!!

Published: 30 Mar 2023, 9:13 PM |
Updated: 31 Mar 2023, 9:13 AM |
Posted By: Menaka

அபுதாபியின் ஷேக் முகமது பின் ரஷீத் சாலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், வாகனங்கள் குறைந்தபட்சம் 120 கிமீ வேகத்திலும், அதிகபட்ச வேகமாக மணிக்கு 140 கிமீ வேகத்திலும் மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1 முதல் விதியை மீறுபவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நெடுஞ்சாலையில் இடதுபுறத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பாதைகளில் குறைந்தபட்சம் 120 கிமீ வேகம் இருக்கும் என்றும் அபுதாபி காவல்துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அத்துடன் மூன்றாவது பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது பாதைக்கு குறைந்தபட்ச வேகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது. அத்துடன், கனரக வாகனங்கள் சாலையின் கடைசிப் பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், இது குறைந்தபட்ச வேக விதியின் கீழ் வராது என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விதி ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்ததும், விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் கண்டறியப்பட்டு முதலில் எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மே 1 ஆம் தேதியிலிருந்து இந்த விதிமீறலுக்கு 400 திர்ஹம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் அஹ்மத் சைஃப் பின் ஜெய்துன் அல் முஹைரி அவர்கள் கூறுகையில், சாலை பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு குறைந்தபட்ச வேகத்தை அமல்படுத்துவதாகவும், மெதுவாக செல்லும் வாகனங்களை பொருத்தமான பாதைகளில் இயக்க இது வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் பாதையை மாற்றும் முன், சாலைகள் தெளிவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.