ADVERTISEMENT

உலகிலேயே முதன்முறையாக ஹெலிபேடில் விமானத்தை இறக்கி சாதனை புரிந்த துபாய்..!! அற்புதமான திறமைக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

Published: 15 Mar 2023, 1:32 PM |
Updated: 15 Mar 2023, 1:58 PM |
Posted By: Menaka

உலகிலேயே மிக குறைந்த ஓடுதளத்தைக் கொண்டுள்ள துபாய் புர்ஜ் அல் அரப் ஹோட்டலின் ஹெலிபேடில் விமானத்தை தரையிறக்க செய்து புதியதொரு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. லூகாஸ் செபியேலா (Lukasz Czepiela) என்ற திறமை வாய்ந்த போலந்து விமானி துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரபு ஹோட்டலில் உள்ள ஹெலிபேடில் ஒரு விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளார்.

ADVERTISEMENT

உலகிலேயே மிகக் குறுகிய ஓடுதளத்தைக் கொண்ட ஹெலிபேடில் “Bullseye Landing”  செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த ஹெலிபேட் வெறும் 27 மீ விட்டம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல புர்ஜ் அல் அரப் ஹோட்டல், பல ஆண்டுகளாக பல கண்கவர் நிகழ்வுகளை நடத்துவதில் புகழ்பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், சுமார் 212 மீட்டர் உயரமுள்ள புர்ஜ் அல் அரப் ஹோட்டலின் உச்சியில் அமைந்துள்ள மிகக் குறுகலான ஓடுதளத்தைக் கொண்ட ஹெலிபேடில் விமானத்தை தரையிறக்கியதால், “வரலாற்றில் ஹெலிபேடில் விமானத்தை தரையிறக்கிய முதல் நபர்” என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் 56வது தளத்தில் உள்ள ஹெலிபேடில் எந்தவித குறிப்பு புள்ளிகளும் இல்லாமல் தரையிறக்கம் செய்தது வியக்கத்தக்கதாகும். இது குறித்து விமானி செபியேலா கூறுகையில், “எனக்கு ஏரோபாட்டிக்ஸ் (aerobatics) மீது மிகுந்த ஆர்வம் உள்ளது, நான் வார்சாவின் பாலங்களின் (Warsaw’s bridges) கீழ் பறக்கும் போது 10 இல் 5 சிரமமாக இருந்தது. அதுபோல, 2019 இல் ஐரோப்பாவின் மிக நீளமான மரத் தூணான Sopot Pier இல் இறங்கிய போது 10ல் 7 வது சவாலாக இருந்தது, ஆனால் Burj Al Arab தரையிறக்கம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது 10க்கு 11 ஆக இருந்தது” என்று அவரது சாகச அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

சவால்களை சமாளித்த விதம்:

இந்த திறமையான சாகசத்தை சாதனையாக நிறைவேற்ற விமானத்தின் எடையை முடிந்தவரை குறைக்க சுமார் 13 சிறப்பு மாற்றங்கள் விமானத்தில் செய்யப்பட்டதாக பைலட் தெரிவித்துள்ளார். அதன்படி, செபியேலாவின் விமானப் போக்குவரத்துக் குழுவில் இருக்கும் புகழ்பெற்ற அமெரிக்க விமானப் பொறியாளர், உற்பத்தியாளர் மற்றும் விமானத்தை உருவாக்குபவரான மைக் பேடே என்பவர் விமானத்தை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

ADVERTISEMENT

எனவே, விமானத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அதன் எடையை 400 கிலோவாகக் குறைத்ததுடன் முக்கிய எரிபொருள் டேங்கை விமானத்தின் பின்புறம் மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செபியேலாவின்  சவாலுக்கு ஆற்றலை அதிகரிக்க நைட்ரஸைச் சேர்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் “இந்த குறுகிய இடத்தில் இருந்து புறப்படுவதற்கான சவாலை மேற்கொள்ள, விமானம் குறைந்த எடையைக் கொண்ட ஆனால் அதிக சக்தியை வழங்கும் ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும். இதை அடைய, நாங்கள் நைட்ரஸ் டேங்குகளை சேர்த்துள்ளோம். இது விமானத்திற்கு எடை சேர்க்காமல் தேவையான ஆற்றலை வழங்கியது. நைட்ரஸ் எரிபொருள் எஞ்சினில் எரிவதை துரிதப்படுத்துகிறது, இது சிலிண்டர்களை விரைவாக முடுக்கிவிட உதவுகிறது” என்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் துபாயில் நேற்று (மார்ச் 14 )அன்று நிகழ்த்தப்பட்ட வரலாற்று சாதனைக்கு முன்னதாக சுமார் 650 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விமானி செபியேலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.