அமீரக செய்திகள்

துபாயின் குறிப்பிட்ட சாலைகளில் இன்று கால தாமதம் ஏற்படும் என RTA அறிவிப்பு..!!

துபாயின் முக்கிய சாலைகளில் வியாழன் (மார்ச்.30) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (மார்ச்.31) முக்கிய சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஆகவே, அந்த சாலைகளில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆணையம் வெளியிட்ட ட்வீட்டில், துபாயில் உள்ள அல் மேதான் ஸ்ட்ரீட் (Al Meydan) மற்றும் மனாமா ஸ்ட்ரீட் (Manama Street) ஆகிய இடங்களில் இரவு 9:30 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் முன்கூட்டியே புறப்பட்டு செல்லுமாறும் அல்லது மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் நடத்தப்படும் நாத் அல் ஷெபா விளையாட்டு போட்டி 2023 (Nad Al Sheba Sports Tournament 2023) சுமார் 75 கிமீ தொலைவில் இரண்டு நாட்களுக்கு நடைபெறுவதால் முக்கிய வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளது. 2013-இல் தொடங்கப்பட்ட போட்டி இப்போது அதன் பத்தாவது பதிப்பில் நடைபெறுகிறது.

NAS விளையாட்டுப் போட்டியானது, பங்கேற்பு மற்றும் பரிசுத் தொகையின் அடிப்படையில் மிகப்பெரிய நிகழ்வாகும், பிரபல நாத் அல் ஷெபா விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியானது, மொத்தம் 4 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகையைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த விளையாட்டுத் தளங்களில் ஒன்றாக இது திகழ்ந்து வருகிறது.

கூடுதலாக, கைப்பந்து, பேடல் டென்னிஸ் (padel tennis), ஜியு-ஜிட்சு, வில்வித்தை, வாள்வீச்சு, சக்கர நாற்காலி கூடைப்பந்து, ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் உட்பட NAS இல் எட்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 3 மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை வழங்கப்படுவதுடன் 1 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள பரிசுகள் பார்வையாளர்களிடையே விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!