அமீரக செய்திகள்

எமிரேட்ஸ் ஐடி ரிஜிஸ்டரேஷன் ஃபார்ம் குறித்த முக்கிய அப்டேட்!! பெடரல் ஆணையம் (ICP) வெளியிட்டுள்ள வீடியோ…

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம் (ICP) குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எமிரேட்ஸ் ஐடியில் உள்ள புதிய பதிவுப் படிவம் (new registration form) குடியிருப்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கவும், அவர்களின் கைரேகை ஸ்கேனிங்கிற்கான தேதியை மாற்றவும் அனுமதிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன், ICP அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் புதிய எமிரேட்ஸ் ஐடி கார்டு, பதிவு படிவம் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் தேவைகளை எளிமையான நடைமுறைகளில் பூர்த்தி செய்யும் வகையில் எமிரேட்ஸ் ஐடி பதிவு படிவத்தை உருவாக்கியுள்ளதாக ICP வீடியோவில் கூறியுள்ளது.

ICP அறிவிப்பின்படி, எமிரேட்ஸ் ஐடி படிவத்தில் உள்ள ஏழு புதிய அப்டேட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ICP இன் காட்சி அடையாளத்திற்கு (visual identity) ஏற்ப படிவத்தை மறுவடிவமைப்பு செய்தல்.

2. விண்ணப்பதாரரின் புகைப்படம் படிவத்தில் இடம்பெறுதல்.

3. எமிரேட்ஸ் ஐடி விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க (Quick Response – QR) குறியீட்டைச் சேர்த்தல்.

4. எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் தரவு மற்றும் அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவு போன்ற விவரங்களை வழங்குதல்.

6. Customer Voice Gateway-க்கு QR குறியீட்டை வழங்குவதன் மூலம் விண்ணப்பதாரர்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம், இது அவர்களை நேரடியாக Customer Voice Gateway-யின் இணைய போர்ட்டலுக்கு அழைத்துச் செல்லும். மேலும், இது ICP சேவைகள் தொடர்பான புகார்கள் மற்றும் கேள்விகளைக் கையாளும்.

7. எமிரேட்ஸ் ஐடி கைரேகை ஸ்கேனுக்கான தேதியை மாற்ற விண்ணப்பதாரரை அனுமதிக்கும் மற்றொரு QR குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய அப்டேட் குறித்து மல்டி ஹேண்ட்ஸ் பிசினஸ்மேன் சர்வீசஸ் நிறுவனத்தின் மேலாளரான ஷாவத் தரவத்தத் அவர்கள் கூறுகையில், “டைப்பிங் சென்டர் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ICP இணையதளத்தில் சமர்ப்பித்த பிறகு, அவர்கள் பதிவு படிவத்தை அச்சிட்டு விண்ணப்பதாரரிடம் கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். அதுபோல, விண்ணப்பப் படிவத்தின் புதிய அம்சங்களைப் பயன்படுத்தி, தங்கள் விண்ணப்பத்தைப் பற்றிய விவரங்களையும், அடுத்து அவர்கள் பின்பற்ற வேண்டிய படிகளையும் விண்ணப்பதாரர்கள் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  ஹொரைசன் கேட் அரசாங்க பரிவர்த்தனை மையத்தின் தலைமை மேற்பார்வையாளர் ஷபீக் முஹம்மது அவர்கள் கூறியதாவது, “புதிய படிவத்தில் இப்போது விண்ணப்ப கண்காணிப்புக்கான QR குறியீடுகள் உள்ளன, மேலும் இது விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடுகிறது.” என்றார்.

இப்போது படிவத்தில் கைரேகை அப்பாயின்ட்மன்ட்  விவரங்களான தேதி, நேரம், இடம் மற்றும் குறிப்பு எண் (reference number) போன்றவை அடங்கும். எனவே, முதல் முறையாக எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கார்டுக்கான பயோமெட்ரிக் தரவை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!