அமீரக செய்திகள்

முப்பதே நிமிடங்களில் மருத்துவரை அணுக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆப்..!! மருத்துவ துறையில் அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பம்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முன்னணி ஹெல்த்கேர் குழுவானது மருத்துவ துறையில் புதுமையான டிஜிட்டல் ஹெல்த்கேர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நோயாளிகள் மருத்துவர்களை சந்திப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே பொது பயிற்சியாளருடன் (General Practitioner) வீடியோ ஆலோசனையைப் பெற உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

GCC மற்றும் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஹெல்த்கேர் குழுமங்களில் ஒன்றான Aster DM Healthcare நிறுவனமானது, myAster என்ற செயலியின் முழு வெர்சனையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது குறித்து டிஜிட்டல் ஹெல்த், அஸ்தெர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிராண்டன் ரோபெரி அவர்கள் கூறுகையில், செயலியில் சுமார் 200 அஸ்தெர் மருத்துவமனை மருத்துவர்களை சந்திப்பதற்கான அணுகலைப் பயனர்கள் பெறலாம் என்றும், அவற்றில் மருத்துவரின் அட்டவணைகள் மற்றும் ஸ்லாட்டுகளைப் பார்த்து ஆலோசனைக்காக மருத்துவரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உடனடி GP அம்சத்தையும் (Instant GP) அறிமுகம் செய்துள்ளதாக கூறிய அவர், எதிர்காலத்தில் மைஆஸ்டர் செயலியில் ஹோம்கேர் சேவைகளைச் சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசிய Aster DM ஹெல்த்கேரின் துணை நிர்வாக இயக்குநர் அலிஷா மூப்பன் அவர்கள், மளிகைப் பொருள்களை சில நிமிடங்களில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்வதைப் போன்றே தேவைப்படும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனையை அணுக முடியும் என்பதுதான் இதன் நோக்கமும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானதும் கூட என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தொற்றுநோயை நிர்வகிப்பதில் அமீரகம் முன்னணியில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியதுடன், அமீரகத்தில் 98 சதவீத மொபைல் போன் பயன்பாடு இருப்பதால், இது போன்ற டிஜிட்டல் மருத்துவ ஆலோசனையை வழங்க எளிதான வழி உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், மருத்துவர்களை சந்திப்பதற்கு முன்பதிவு செய்வதிலிருந்து, ஒருவர் டெலி-கன்சல்டேஷன் (tele consultation) பெற்று நோயாளிகள் வீட்டிலேயே மருந்துகளைப் பெற முடியும் என்றும் இந்த அமைப்பு காப்பீட்டு ஒப்புதலையும் அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இலவச ஆப் ஆனது, நோயாளிகள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் தங்கள் உடல்நலத் தரவை எங்கும் எந்த நேரத்திலும் அணுகவும் நிர்வகிக்கவும் பல தனித்துவமான அம்சங்களை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த செயலியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில், 5 மருத்துவமனைகள், 48 கிளினிக்குகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட மருத்துவ சிறப்புகளில் 430 மருத்துவர்களிடமிருந்து சந்திப்புகளை முன்பதிவு செய்ய முடியும் என்பதாகும்.

அதுபோலவே, வீடியோ ஆலோசனைகள், ஆன்லைனில் பணம் செலுத்துதல், 90 நிமிடங்களுக்குள் வழங்கப்படும் மருத்துவரின் பரிந்துரையுடன் ஆன்லைன் மருந்தகத்தை அணுகுதல் மற்றும் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களைப் பெறவும் இந்த ஆப் அனுமதிப்பது இதன் சிறப்பம்சமாகும். அதுமட்டுமின்றி, இந்த ஆப் மூலம், நோயாளிகள் தங்கள் ஸ்கேன் மற்றும் மருத்துவ அறிக்கைகளையும் அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!