ADVERTISEMENT

மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!

Published: 26 Mar 2023, 6:17 AM |
Updated: 26 Mar 2023, 12:25 PM |
Posted By: Menaka

ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

கடுமையான நோய்த்தொற்றுகளை உண்டாக்கி மரணத்தை உண்டாக்கும் பாக்டீரியாவான க்ரோனோபாக்டர் (Cronobacter) கலந்ததற்கான சாத்தியக்கூறு இருப்பதால், “Nestlé Good Start Soothe (infant formula) 942 g” பயன்பாட்டை நிறுத்துமாறு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், அமைச்சகத்தின் சுற்றறிக்கையில், இந்த தயாரிப்பு பிறந்த மற்றும் சிறிய குழந்தைகளுக்கான சிறப்பு பால் ஃபார்முலா பவுடர் என்று தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, குறிப்பாக குழந்தைகளுக்கு மத்தியில் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

இவை பின்வரும் ஆபரேட்டிங் எண்களுடன் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டுள்ளது:

  • 301757651Z (EXP 2024 JL 18)
  • 301757652Z (EXP 2024 JL 18)
  • 301857651Z (EXP 2024 JL 19)

கடுமையான தாக்கத்தை விளைவிக்கும் நெஸ்லே பிராண்டின் இந்த ஃபார்முலாவை அந்நிறுவனம் திரும்பப் பெறுவது குறித்து கனேடிய அதிகாரிகள் அறிவித்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த சுற்றறிக்கை வந்துள்ளதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், குரோனோபாக்டரால் மாசுபடுவதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவாக, இளம் குழந்தைகளிடையே கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் மற்றும் பெரும்பாலும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த தயாரிப்பு தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட நோய்கள் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், முன்னேச்சரிக்கையுடன் இந்த பால் பவுடரை பயன்படுத்துபவர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. அதேசமயம், ஓமானின் உள்ளூர் சந்தைகளில் உள்ள பிற தயாரிப்புகள் இந்த எச்சரிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதையும் இதனால் மற்ற தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.