அமீரக செய்திகள்

துபாய்: பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பிக் அப், டிராப் அப் செய்ய புதிய டாக்ஸி சேவை.. பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என RTA தகவல்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) துபாயில் உள்ள பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் இப்போது பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் டிராப் செய்வதற்கும் ஆன்லைனில் டாக்சிகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

‘In-Safe Hands’ என அழைக்கப்படும் இந்த டாக்ஸி சேவையானது குறிப்பாக, பள்ளியிலிருந்து பேருந்துகள் வராத பகுதிகளில் உள்ள குடியிருப்பளார்கள் டாக்ஸிகளை முன்பதிவு செய்து பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், RTA-வின் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) ஆப் மூலம் டாக்ஸிகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், RTA இது பற்றி கூறுகையில் இந்த புதிய அம்சம், டாக்ஸி சேவையின் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் சேனல்களை பன்முகப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் கோரிக்கைகளை விரைவாக செயலாக்குதல் மற்றும் கண்காணிப்பதை உறுதி செய்தல் போன்றவற்றை.

அதுபோல, ‘In-Safe Hands’ சேவையானது பெற்றோர்கள் தினசரி அல்லது வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் டாக்ஸிகளை முன்பதிவு செய்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், திரும்ப அழைத்து வரவும் உதவுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவையை வழங்குவதற்கு DTC ஆப், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி மையம் (80088088) மற்றும் மின்னஞ்சல் முகவரி ([email protected]) போன்ற பல சேனல்களை DTC வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறந்த சேவைகளை DTC வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ளதாகவும், அதேநேரத்தில் ஆணையத்தின் பல்வகை போக்குவரத்தின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகவும் DTC டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அப்துல்லா இப்ராஹிம் அல் மீர் கூறியுள்ளார். அத்துடன் 2021 மற்றும் 2022 க்கு இடையில் டிஜிட்டல் செயலியில் 122 சதவீதம் சேவை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த புதிய சேவை தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!