ADVERTISEMENT

பெண் ஓட்டுநர்களையும் வேலைக்கு எடுக்க அனுமதி.. பெண்களுக்கான புதிய 13 வேலைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சவூதி தகவல்..!!

Published: 9 Mar 2023, 6:45 PM |
Updated: 9 Mar 2023, 7:10 PM |
Posted By: Menaka

சவூதி அரேபியாவானது பெண்களுக்குக் கிடைக்கும் வீட்டுத் தொழிலாளர் வேலைகளின் பட்டியலைப் புதுப்பித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வீட்டுத் தொழிலாளர் பிரிவில் வேலைக்கு வரும் பெணகளுக்கு மேலும் 13 புதிய தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர், தனிப்பட்ட பராமரிப்புப் பணியாளர், வீட்டுத் தையல்காரர், வீட்டு மேலாளர், தனியார் ஆசிரியர் மற்றும் வீட்டு விவசாயி போன்றவை புதிய தொழில்களில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் பல தசாப்தங்களாக இருந்த பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை கடந்த 2018 ஆம் ஆண்டில், அதன் வரலாற்றில் முதல் முறையாக நீக்கி பெண்களையும் வாகனம் ஓட்ட அனுமதித்து அந்த தடையை முடிவுக்கு கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்சமயம், வீட்டுத் தொழிலாளர் துறையை மேம்படுத்துவதற்கும், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதன் இணையதளமான Musaned மூலம் புதிய வேலைகளை ஆட்சேர்ப்பு செய்யலாம் என்று ட்விட்டரில் அரசின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resources and Social Development) தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியா பணியிடங்களில் பெண்களின் எண்ணிகையை அதிகரிக்க முயற்சித்து வரும் நிலையில், ஆட்சேர்ப்பு கோரிக்கைகள் மற்றும் முதலாளிக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்த உறவுகள் உள்ளிட்ட தொடர்புடைய சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் வகையில் Musaned தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து கிடைத்துள்ள தரவுகளின் படி, கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்டின் இரண்டாவது காலாண்டை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 193,000 அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை உயர்வு , மூன்று மாதங்களில் 155,000 பேர் வீட்டு வேலையாட்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் பணிக்கு வந்ததால் அதிகரித்தததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, 2019 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 464,000 என வீட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதில் இருந்து இதுவே அதிகபட்ச எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT