ADVERTISEMENT

அமீரகத்தைப் போன்றே சவூதியிலும் மூன்று நாட்கள் வார விடுமுறைக்கு பரிசீலனை..!! அமைச்சகம் தகவல்..!!

Published: 14 Mar 2023, 9:19 AM |
Updated: 14 Mar 2023, 9:23 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2022 ம் ஆண்டில் இருந்து வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை, இரண்டரை நாட்கள் விடுமுறை எனும் புதிய வார வேலை நாட்களை அரசு அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. அதிலும் அமீரகத்தின் ஷார்ஜா எமிரேட்டில் இந்த வார இறுதி விடுமுறையானது மூன்று நாட்களாக மாற்றப்பட்டு ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே ஊழியர்களுக்கு வேலை எனும் முறையை ஷார்ஜா அரசு அறிவித்து அதனை அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ஒரு சில தனியார் நிறுவனங்களும் செயல்படுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் அமீரகத்தில் நடைமுறையில் இருக்கும் மூன்று நாள் வார இறுதி விடுமுறையை பின்பற்றி, சவூதி அரேபியாவும் தற்போது அதே மூன்று நாள் வார இறுதியை பரிசீலித்து வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, தொழிலாளர்களுக்கு வாராந்திர விடுமுறையை மூன்று நாட்களுக்கு நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தற்போதைய வேலை முறையை ஆய்வு செய்து வருவதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resources and Social Development) ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கில் அதன் பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாட்டில் அதிகரித்துள்ள வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கான சந்தையின் ஈர்ப்பை உயர்த்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட கால ஆய்வு மூலம் தற்போதைய பணி முறையை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், பொது ஆலோசனைக்காக ஒரு கணக்கெடுப்பு தளத்தில் பணி முறையின் வரைவு (draft of the work system) முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் குறுகிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய வேளையில், அப்போது வரை இருந்த வெள்ளி-சனி வார இறுதி விடுமுறையை சனி-ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியதாக அறிவித்தது. அத்துடன் இந்த புதிய அமைப்பு அனைத்து அரசு நிறுவனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தனியார் துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் இதைப் பின்பற்றி வருகின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் வேலை நேரம் மதியம் வரை மட்டுமே ஆகும்.

ADVERTISEMENT

இதற்கு மத்தியில், ஷார்ஜா எமிரேட்டில் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்களாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.