அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல்..!! மதிப்பீட்டின் அடிப்படையில் கட்டணம் உயரும் என்று தகவல்…!!

ஷார்ஜாவில் அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை 5 சதவீதம் வரை உயர்த்த ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதத்தை மதிப்பீடு செய்துள்ளதாகவும், ‘Acceptable’ என்பதற்கு மேல் மதிப்பீட்டைக் கொண்ட பள்ளிகள் தங்கள் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கத் தகுதிபெறும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்தில், துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்பொழுது ஷார்ஜாவின் கல்வி ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், “ஷார்ஜா எமிரேட்டில் மிக உயர்ந்த தரமான கற்பித்தல் மற்றும் கற்றலை அடைவதற்காகவும், வளங்கள் மற்றும் வேலைத் தேவைகளை மேம்படுத்துவதற்கான தனியார் துறையின் தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இது ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளியின் கல்வி மதிப்பீடு மற்றும் நாட்டின் பணவீக்க விகிதத்தின் படி, 2023-2024 கல்வியாண்டில் ஷார்ஜா தனியார் பள்ளிகளில் 5 சதவீதத்திற்கு மிகாமல் ஆண்டு கல்விக் கட்டணம் அதிகரிக்கலாம்” என்று வெளியிடப்பட்டுள்ளது.

துபாயின் பள்ளிக் கட்டணக் கட்டமைப்பின் கீழ் (School Fees Framework), ‘Acceptable’ என்ற ஆய்வு மதிப்பீட்டைப் பராமரிக்கும் தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை மூன்று சதவீதம் வரை மட்டுமே அதிகரிக்கத் தகுதி பெறும் என்றும், வருடாந்திர மதிப்பீட்டில் குறையும் பள்ளிகள் எந்த கட்டண உயர்விற்கும் தகுதி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்திய ஆய்வில் தங்கள் மதிப்பீட்டை அதிகரிக்கும் பள்ளிகள், பள்ளிக் கட்டணக் கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படி தங்கள் கட்டணத்தை அதிகரிக்கத் தகுதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல, துபாயில் மூன்று வருடங்கள் நிறைவு செய்திருக்கும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இந்த கட்டமைப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

KHDA அறிவித்த பள்ளிக் கட்டண உயர்வு முறை:

  • முந்தைய ஆண்டின் அதே மதிப்பீட்டைப் பராமரிக்கும் தகுதியுள்ள பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 3 சதவீதம் வரை உயர்த்தத் தகுதி பெறும்.
  • அதேசமயம், ‘Very weak to weak’, ‘Weak to Acceptable’ மற்றும் ‘Acceptable to good’ போன்று மதிப்பீடுகளில் மாறும் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை 3X2 ஆக உயர்த்தலாம், அதாவது 6% வரை உயர்த்த அனுமதி உண்டு.
  • அதுபோல, ‘Good to Very Good’ என்று மதிப்பீட்டை உயர்த்தியுள்ள பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை 3X1.75 ஆக அதிகரிக்கலாம், அதாவது 5.25 சதவீதம்.
  • ‘Very Good to Outstanding’ என ரேட்டிங்கை உயர்த்தியுள்ள கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை 3X1.5 ஆக அதிகரிக்கலாம், அதாவது 4.5 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!