ADVERTISEMENT

UAE: இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணாதீங்க!! 90 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ள எவ்ரிடே சென்டர்…!!

Published: 10 Mar 2023, 6:07 PM |
Updated: 10 Mar 2023, 6:30 PM |
Posted By: Menaka

ஷார்ஜா எமிரேட்டில் உள்ள முன்னணி சில்லறை விற்பனையகமான எவ்ரிடே சென்டர் (Everyday Center), அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்பு பொருட்களில் எதிர்பார்க்காத அளவிற்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. தற்பொழுது தொடங்கப்பட்டிருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையானது வரும் மார்ச் 31 வரை, பெரும்பாலான தயாரிப்புகள், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், வீடுகள், உணவுப் பொருட்கள் மற்றும் பலவற்றில் 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவில் அல் மனாக், அல் எஸ்டிக்லால் ஸ்கொயர் பகுதியில் அமைந்துள்ள இந்த எவ்ரிடே சென்டரில் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பரந்த அளவிலான பொருள்களையும் விற்பனை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்ததுடன் மற்ற கடைக்காரர்கள் முறியடிக்க முடியாத அளவிற்கு மலிவான விலைகளில் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து வருகிறது. எனவே, இங்கு பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், தங்கள் ஷாப்பிங் சென்டரை தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் இலவச கார் பார்க்கிங் வசதியையும் இந்த சென்டர் ஏற்படுத்தி உள்ளது. அதில் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த அதிரடித் தள்ளுபடி குறித்து எவ்ரிடே சென்டரின் CEO மெஹ்ரான் அவர்கள் கூறுகையில், பணத்தின் மதிப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து வீட்டு உபயோக பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பெரும்பாலான தயாரிப்புகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” இதுவே எங்கள் வழி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு மற்றும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்” என்றும் கூறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க சலுகை என்னவெனில், மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசியமான மளிகை பொருட்கள் மற்றும் பிற வீட்டு மளிகை பொருட்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குவதாக அறவிக்கப்பட்டுள்ளதாகும்.

அதேசமயம், எவ்ரிடே சென்டரில் இந்த தள்ளுபடிகள் பிரச்சாரத்தில் உள்ளடக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பொருட்களின் தரங்களை பாதிக்காது என்றும், தள்ளுபடி விலையில் கூட பிராண்ட் அதை சமரசம் செய்யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த அதிரடித் தள்ளுபடியைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.