ADVERTISEMENT

ரமலானை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு புதிய வேலை நேரங்களை அறிவித்துள்ள அமீரகம்..!!

Published: 11 Mar 2023, 6:19 PM |
Updated: 11 Mar 2023, 6:40 PM |
Posted By: Menaka

ரமலானை முன்னிட்டு பற்றி செயல்படும் நேரங்கள், அலுவலகம் இயங்கும் நேரங்கள் உள்ளிட்ட பலவற்றில் அமீரகமானது ஒவ்வொரு வருடமும் மாற்றங்களை சந்தித்து வருகின்றது. அதாவது இந்த ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களை கவனத்தில் கொண்டு பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் நேரங்கள் குறைக்கப்படுவது பொதுவாக நடைமுறையில் இருந்து வரும் நடவடிக்கையாகும்.

ADVERTISEMENT

அதனை பின்பற்றி அமீரகத்தில் வரவிருக்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசின் மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையம் (Federal Authority for Government Human Resources – FAHR) ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஃபெடரல் அதிகாரிகளின் ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ வேலை நேரத்தை மாற்றி அமைக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அமைச்சகங்கள் மற்றும் ஃபெடரல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை 9:00 முதல் 14:30 வரையிலும், வெள்ளிக்கிழமை 9:00 முதல் 12:00 வரையிலும் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, அதிகாரிகள் ரமலான் மாதத்தில் வேலையை நெகிழ்வான வேலை அல்லது தொலைதூர வேலையாக செயல்படுத்தலாம் என்று FAHR வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ரமலானை முன்னிட்டு அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு அமீரக பிரதம மந்திரி மற்றும் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், மற்றும் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர்கள் அமீரகத்தின் உயர்மட்ட ஆட்சியாளர்கள் ஆகியோருக்கு FAHR வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாது ரமலான் மாதத்தில் துபாயில் தனியார் பள்ளிகளின் நேரம் ஐந்து மணிநேரமாக குறைக்கப்படும் என்று துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) தெரிவித்துள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வேலை நேரம் குறைவாக இருப்பதை வரவேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

ஆணையத்தின் உத்தரவின்படி, துபாயில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு விருப்பத்தில், காலை 7.45 மணிக்குத் தொடங்கும் பள்ளிகள் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 12.45 மணிக்கும், வெள்ளிக்கிழமை காலை 7.45 முதல் 11.45 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு விருப்பத்தின்படி, காலை 8 மணிக்கு பள்ளி தொடங்கும் நிறுவனங்கள் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 1 மணிக்கும், வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கும் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.