அமீரக செய்திகள்

20% தள்ளுபடியுடன் ஃபிளாஷ் விற்பனையை அறிவித்துள்ள எதிஹாட் ஏர்வேஸ்..!! இனி சுலபமாக செக்-இன் செய்யலாம்…!!

அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த மார்ச் 8 அன்று வெற்றிகரமாக Amadeus Altéa பயணிகள் சேவை அமைப்புக்கு மாறியுள்ளது. எனவே, இதை கொண்டாடும் விதமாகவும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டியும் etihad.com என்ற இணையதளத்தில் ஃபிளாஷ் விற்பனையை விமான நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதில் EYFLASH20 என்ற ப்ரோமோ குறியீட்டைப் (Promo Code) பயன்படுத்தி 20% தள்ளுபடி சலுகையைப் பயணிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தள்ளுபடி விற்பனையானது எதிர்வரும் மார்ச் 14 நள்ளிரவு வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அபுதாபி மற்றும் அதன் உலகளாவிய விமான நிலைய நெட்வொர்க்குகளுக்கு இடையேயான அனைத்து எதிஹாட் ஏர்வேஸ் விமானங்களும் இப்போது Amadeus Altéa பயண தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வகிக்கப்படுவதால், விரைவான மற்றும் எளிமையான செக்-இன் மற்றும் போர்டிங் செயல்முறையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எதிஹாடின் தலைமை நிர்வாக அதிகாரி Antonoaldo Neves கூறியதாவது: ” எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் (upgrade) எதிர்காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் தேவையான கருவிகளை அமேடியஸ் எங்களுக்கு வழங்குகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் https://etihad.com/ மூலம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செயும்போது, அல்லது மொபைல் ஆப் மற்றும் சுய சேவைக் கருவிகளைப் பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவது, அவர்களின் பயணத்தை நிர்வகிப்பதில் அவர்களுக்கு இன்னும் அதிக நெகிழ்வுத்தன்மையையும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, 100க்கும் மேற்பட்ட IT செயல்முறைகள் மாற்றப்பட்டு, 6,000 க்கும் மேற்பட்ட சக பணியாளர்கள் இந்த புதிய அமைப்பைப் பயன்படுத்த பயிற்சி பெற்றதன் மூலம் இந்நிறுவனம் கடந்த தசாப்தத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் திட்டமாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆகவே, இதை முடிக்க கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிஹாடின் வாடிக்கையாளர்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளையும் etihad.com என்ற இணைய தளத்திலோ, மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது பயண முகவர் மூலமாகவோ பயன்படுத்தலாம். இதில் விமான முன்பதிவு, செக்-இன், மேம்படுத்தல்கள் மற்றும் கெஸ்ட்சீட் ரிடெம்ப்ஷன் (GuestSeat Redumption) முன்பதிவுகள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!