அமீரக செய்திகள்

அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது அவர்களின் 62 வது பிறந்தநாள்!! அதிபர் பற்றி பலரும் அறியாத விபரங்கள் இதோ…

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், இன்று மார்ச் 11 ஆம் தேதி அவரது 62 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல தசாப்தங்களாக அமீரக மக்களுக்கு சேவை செய்து வரும் அவரை இரக்கமுள்ள, தாராளமான மற்றும் கடின உழைப்பாளியாக குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் அறிந்துள்ளனர். அவரது பல்வேறு சாதனைகளுக்கு அப்பால், அவர் ராஜாக்கள், தொழிலாளர்கள் மற்றும் முன்னணியில் இருப்பவர்கள் என அவரைச் சுற்றியுள்ள அனைவருடனும் அவர் பழகும் விதத்தினை பலர் பாராட்டியுள்ளனர்.

அமீரகத்தின் அதிபர் ஆனாலும் அவரது மறைந்த தந்தையைப் போலவே மக்களின் குறைகளை எல்லா நேரங்களிலும் கேட்க தயாராக உள்ள மக்களின் அதிபருக்கு, தேசம் வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கும் வேளையில், அமீரக அதிபர் பற்றி பலரும் அறியாத ஒரு சில விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

அதிபரின் முழுப்பெயர்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மக்களின் தலைவரது முழுப்பெயர் ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தான் பின் சயீத் பின் கலீஃபா பின் ஷக்பூத் பின் தியாப் பின் இஸ்ஸா பின் நஹ்யான் பின் ஃபலாஹ் பின் யாஸ் என்பதாகும். இந்த முழுப்பெயரும் ஐக்கிய அரபு அமீரக அதிபரின் பரம்பரையைக் குறிக்கிறது மற்றும் ‘பின்’ என்பது ‘மகன்’ என்று பொருள்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மகன்:

அவர் மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மூன்றாவது மகன் என்றும், மேலும் அவரது தந்தை ஷேக் சையத் மற்றும் அவரது தாயார் ஷேக்கா பாத்திமா பின்த் முபாரக் ஆகியோரின் கண்காணிப்பில் வளர்ந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வாழ்க்கையின் முதல் 10 ஆண்டுகளில், அமீரக வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதன்படி, முதலில் 1962 ஆம் ஆண்டு அபுதாபி எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளது; அடுத்த நான்கு வருடங்களில் அவரது தந்தை 1966 இல் அபுதாபியின் ஆட்சியாளராக பதவியேற்றுள்ளார். பின் 1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதே ஆண்டில் அவரது தந்தை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

மஜ்லிஸில் கல்வியைத் தொடங்கிய அதிபர்:

பள்ளிக்குச் சென்று முறையான கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, அவர் தனது நேரத்தை ஷேக் சயீதின் மஜ்லிஸ் மற்றும் பழங்குடி பெரியவர்களுடன் செலவழித்ததால் ஏராளமான அறிவைக் கற்றுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரது சிறு வயது முதல் 18 வயது வரை அல் அய்ன் மற்றும் அபுதாபியில் உள்ள பள்ளிகளில் முறையாக பயின்றுள்ளார். அத்துடன் ரபாத்தில் உள்ள ராயல் அகாடமிக்கும் சென்று படித்துள்ளார்.

ஹெலிகாப்டரை தைரியமாக இயக்குபவர்:

2023 இல் அமீரகத்தின் பிரமாண்டமான வானவேடிக்கை நிகழ்வுகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட போது அவர் ஹெலிகாப்டர் ஒன்றை இயக்கியுள்ளார். இது அவருக்கு முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2017 இல் சில முறையும், 2022 இல் ஒரு முறையும் இயக்கியுள்ளார்.

உண்மை என்னவெனில், 1979 இல் ஒரு புகழ்பெற்ற இராணுவ அகாடமியில் பட்டம் பெற்றதுடன் அவர் பயிற்சி பெற்ற விமானி என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர் பாராட்ரூப்களையும் கற்றுக்கொண்டுள்ளார்.

 

அதிபரின் இரண்டு வளர்ப்பு மகள்கள்:

1981 இல் ஷேக்கா சலாமா பின்த் ஹம்தான் பின் முகமது அல் நஹ்யான் என்பவரை மணந்த அதிபருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் பிறந்த நிலையில், அமினா மற்றும் சல்ஹா என்ற இரண்டு வளர்ப்பு மகள்களையும் அவர் வளர்த்துள்ளார்.

நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை :

அதிபர் ஷேக் முகம்மது அவரது தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் எவ்வளவு தீவிரமாக உழைக்கிறார் என்பதை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அதிபர் ஒரு நாளைக்கு 18 மணி நேரத்தை அவரது வேலைக்காக அர்ப்பணிப்பதாகவும், அவரது வருடாந்திர விடுப்பு ஒரு வாரத்திற்கு மிகாமல் இருப்பதாகவும் மக்தூம் குறிப்பிட்டுள்ளார்.

வனவிலங்குகள் மற்றும் பருந்துகளை நேசிப்பவர்:

ஷேக் முகமது காட்டு ஃபால்கன்கள் மற்றும் பஸ்டர்ட்கள் மற்றும் அரேபியா ஓரிக்ஸ் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சிறுவயதிலிருந்தே தனது தந்தையிடம் பாரம்பரிய விளையாட்டைக் கற்றுக்கொண்ட அவர் பருந்துகளின் மீது பேரார்வம் காட்டியுள்ளார்.

கவிதைகளில் ஆர்வம் மிக்கவர்:

Nabati பாணியில் உள்ள கவிதைப் போட்டிகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதுடன் தன்னால் முடிந்தவரை நேரில் கலந்துகொள்ள முயற்சிக்கும் அதிபரின் கவிதை ஆர்வத்தை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!