ADVERTISEMENT

வெளிநாட்டவர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை முறையை உயர்த்தியுள்ள ஐக்கிய அரபு அமீரகம்!! சமீபத்திய கணக்கெடுப்பில் வெளியான தகவல்…

Published: 7 Mar 2023, 9:50 AM |
Updated: 7 Mar 2023, 10:24 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகம் பெரும்பாலான வெளிநாட்டவர்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மாற்றக்கூடிய நாடாக உள்ளது என்று சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன. HSBCயின் சமீபத்திய ஆராய்ச்சியின்படி, ஒன்பது முக்கிய சந்தைகளில் இங்குள்ள வருமானம், வாழ்க்கைத் தரம், வாங்கும் திறன் போன்றவற்றில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தைப் பிடித்து வெளிநாட்டினர் புலம்பெயர்ந்து வருவதற்கு உந்துதலாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிறந்த வாழ்க்கை முறை, சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலை, அதிக வருமானம், பயணம் செய்வதற்கான வாய்ப்பு, குடும்பத்தின் ஸ்திரத்தன்மை (stability), வேலையில் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல், வளர்ச்சி வாய்ப்புகள், மிகவும் நிலையான சூழலில் வாழ்வது, தொழில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள், சிறந்த தொழில்நுட்பம், நெகிழ்வான ரிமோட் வேலை விதிகள் போன்றவை அமீரகத்திற்கு புலம்பெயர முக்கிய காரணங்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியின் முடிவில் அமீரகத்திற்கு இடம்பெயர்ந்தவர்களில் 36 சதவீதத்தினர் தங்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு அமீரகம் முதன்மையான உந்துதலாக இருந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், லாபகரமான வருமானத்திற்காக 34 சதவீதத்தினரும், குடும்பத்தின் நிலைதிறனுக்காக 34 சதவீதத்தினரும், கூடுதல் பணத்தைச் சேர்ப்பதற்காக 37 சதவீதத்தினரும் மற்றும் நிலையான வாழ்க்கைச் சூழலில் வாழ்வதற்காக 30 சதவீதத்தினரும் அமீரகத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகளவில், சுமார் 53 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சில சிரமங்களையும் ஆராய்ச்சில் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலும் உள்ளூர் கடன் வரலாறு (Local Credit History) இல்லாததே இதுபோன்ற சவால்களுக்குக் காரணம் என்று 56 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், அமீரகத்தைப் பொறுத்தவரை, இந்த புள்ளிவிவரங்கள் உலகளாவிய கணக்கெடுப்பின் சராசரியை விட மிகக் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமீரக குடியிருப்பாளர்கள் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் அனைவரையும் தங்களின் சொந்த வீட்டில் இருப்பது போல உணர வைத்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு உயர்ந்த வாழ்க்கை முறையை எளிதாக்குவதாகவும், நாட்டின் நீண்டகால தொலைநோக்குப் பார்வை மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் வேலை அல்லது வணிகத்தில் மகத்தான வாய்ப்புகளுக்கு தானே உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதுபோல, உலகத் தரம் வாய்ந்த கல்வி, சுகாதாரம் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு ஆகியவை இந்த நாட்டை பலருக்கு இரண்டாவது வீடாக மாற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி உலகில் எங்கிருந்து வந்தாலும் சரி, ஆரோக்கியமான, நிறைவான மற்றும் பலனளிக்கும் வாழ்க்கையை விரும்புவோருக்கு, அமீரகம் உண்மையிலேயே ஒரு உலகளாவிய மையமாக மாறியுள்ளது என்று லைஃப் ஹெல்த்கேர் குழுமத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் அப்துல் நாசர் என்பவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல முடிவெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் உந்துதல்கள் மற்றும் சவால்களை எடுத்துக்காட்டும் இந்த சர்வேயானது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.