அமீரக செய்திகள்

UAE: நண்பர்கள் அல்லது உறவினருக்கான 90 நாள் விசிட் விசாவிற்கு ICP-ல் விண்ணப்பிப்பது எப்படி.! படிப்படியான தகவல்கள்..

துபாயை தவிர்த்து அமீரகத்தின் மற்ற எமிரேட்டுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை நாட்டிற்கு அழைக்க திட்டமிட்டிருந்தால், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) மூலம் 90 நாள் சிங்கிள் அல்லது மல்ட்டிப்பிள் என்ட்ரி விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

அதன்படி, அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் உம்முல் குவைன் ஆகிய எமிரேட்டுகளில் குடியிருப்பு விசா பெற்றிருக்கும் குடியிருப்பாளர்கள் இந்த சேவையையை அணுகுவதன் மூலம், 90 நாள் விசிட் விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன போன்ற அனைத்து விபரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

விசா விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட சேவைகள்:

— ICP ஸ்மார்ட் சர்வீஸின் smartservices.icp.gov.ae என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

— ICP மொபைல் பயன்பாடான ‘UAEICP’ மூலம் விண்ணப்பிக்கலாம், இது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கும்.

— ஒவ்வொரு எமிரேட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை https://icp.gov.ae/en/typing-offices/ என்ற லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள்:

அமீரகத்தின் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் அவரது நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில், பின்வரும் முக்கியமான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • குடும்பத்தினர் அல்லது நண்பரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • குடும்ப உறுப்பினரின் விசிட் விசாவிற்கு நீங்கள் நிதியுதவி செய்யும்பட்சத்தில் உறவினருக்கான சான்று (பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்).
  • உறவினர் அல்லது நண்பரின் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டின் நகல்.
  • உங்கள் எமிரேட்ஸ் ஐடியின் நகல்.
  • ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களுக்கான இருப்பிடச் சான்று.
  • மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்பும்  டிக்கெட்டின் நகல்.

அதுமட்டுமில்லாமல், ICP வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  விண்ணப்பத்தில் உள்ளிடப்பட்ட தகவலைப் பொறுத்து, கூடுதல் ஆவணங்களை வழங்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:

விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க ICP ஸ்மார்ட் சர்வீசஸ் தளத்தின் மூலம் https://smartservices.icp.gov.ae/echannels என்ற லிங்கை கிளிக் செய்து பார்வையிடவேண்டும். பின்னர் கீழேகொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்.

1. UAEPASS அல்லது ICP ஆன்லைன் கணக்கு மூலம் உள்நுழைந்தவுடன் பயன்பாட்டில் உள்ள தனிப்பட்ட டாஷ்போர்டுக்கு உங்களை எடுத்துச் செல்லும்.

2. பின்னர் உங்கள் எமிரேட்டில் உள்ள Federal Authority For Identity and Citizenship-ICP துறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

3. அடுத்து தேடல் பட்டியில் ‘Visit Visa For Friend or Relative 90 Days (Single Entry) – Issue’ என்று டைப்பிங் செய்து தேடினால் சேவை கீழே தோன்றும்.

4. அதனைத் தொடர்ந்து ‘Start Service’ என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.

5. இறுதியாக, கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், பணம் செலுத்தியதும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக ICP இலிருந்து உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

6. மேலும், ICP கால் சென்டர் – 600522222 இன் படி, ஒரு முறை ஒப்புதல் அளிக்கப்பட்ட விசிட் விசா வழங்குவதற்கு தோராயமாக இரண்டு முதல் ஐந்து வேலை நாட்கள் ஆகும் என்றும் விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரியில் உங்களின் டிஜிட்டல் விசாவைப் பெறுவீர்கள்.

கட்டண விவரங்கள்:

விசாவிற்கான இறுதி கட்டணம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப விவரங்களைப் பொறுத்து மாறுபடும். மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஸ்பான்சர் அவரது உறவினர்களை 90 நாள் விசாவில் எடுப்பதற்கு பாதுகாப்பு வைப்புத்தொகையையும் கட்டாயம் செலுத்த வேண்டும். விசா கட்டணம், சேவை கட்டணம் என அனைத்தும் சேர்த்து
1,575 திர்ஹம்கள் மொத்தமாக செலுத்த வேண்டி இருக்கும். அதன் விபரங்களை கீழே காணலாம்.

  • பாதுகாப்பு வைப்புத்தொகை (Security deposit) – 1,025 திர்ஹம்கள்
  • கோரிக்கை கட்டணம் (Request fees) – 100 திர்ஹம்கள்
  • வெளியீட்டு கட்டணம் (Issue fees) – 300 திர்ஹம்கள்
  • இ-சேவை கட்டணம் (E-services fees) – 28 திர்ஹம்கள்
  • ICP கட்டணம் (ICP fees) – 22 திர்ஹம்கள்
  • ஸ்மார்ட் சர்வீஸ் கட்டணம் (Smart services fee) – 100 திர்ஹம்கள்

Related Articles

Back to top button
error: Content is protected !!