ADVERTISEMENT

திறப்பு விழாவிற்கு தயாரான உலகின் பிரம்மாண்ட ‘Seaworld Abudhabi’.. தேதியை அறிவித்த நிர்வாகம்.. அசத்தலான தொழில்நுட்பமும், விதவிதமான அனுபவங்களும்…

Published: 25 Mar 2023, 4:37 PM |
Updated: 25 Mar 2023, 5:41 PM |
Posted By: Menaka

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கடல்வாழ் தீம் பார்க்கான Seaworld Abudhabi எதிர்வரும் மே 23 அன்று திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கேளிக்கை மையத்தின் பிரதான இடமாகவும், ஆடம்பர விடுதிகள் நிறைந்து காணப்படும் பகுதியாவும் ஜொலித்துக் கொண்டிருக்கும் அபுதாபி எமிரேட்டை மேலும் மெருகேற்ற அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட தீம் பார்க் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

SeaWorld அபுதாபியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் எட்டு கருப்பொருள் பகுதிகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சுமார் 183,000 சதுர மீட்டர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக விரிவான பல இனங்களைக் கொண்ட மீன்வளத்தின் தாயகமாக அமைக்கப்பட்டுள்ள ‘seaworld abudhabi’ கடல்வாழ் அருங்காட்சியகத்தை Miral மற்றும் SeaWorld Parks and Entertainment ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளன.

என்னென்ன பார்க்கலாம்?

அபுதாபியின் யாஸ் தீவில் அமைந்துள்ள கடல் வாழ் தீம் பூங்கா ஏறத்தாழ 25 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கொண்டிருக்கும் மற்றும் 68,000 க்கும் மேற்பட்ட கடல்வாழ் விலங்குகளுக்கு வாழ்விடமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 150 வகையான பறவைகள், மீன்கள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன உட்பட மொத்தம் 100,000 கடல் விலங்குகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு அருங்காட்சியத்துடன் விலங்குகள் சரணாலயம், சவாரிகள், பொழுதுபோக்கு இடம், உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் போன்ற பல்வேறு விதமான அனுபவங்களையும் பார்வையாளர்கள் பெறலாம்.

ADVERTISEMENT

அதேசமயம், கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்றவும், மறுவாழ்வு கொடுக்கவும் தீம் பார்க்குடன் ஆராய்ச்சி மற்றும் மீட்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதிநவீன தொழில்நுட்பத்தால் அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் விலங்குகள் அதன் விருப்பம் போல் இயற்கையுடன் ஒன்றி வாழ்வதைப் போல் சூழ்நிலைகள் உள்ளன.

ADVERTISEMENT

வியக்க வைக்கும் தொழில்நுட்பம்:

சீவேர்ல்ட் அபுதாபியின் குறிப்பிடத்தக்க முயற்சி என்னெவெனில், கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளதால் உயிரினங்கள் காலநிலை (இரவு/பகல்) பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பருவகால ஒளி சுழற்சிகளை உருவாக்கக் கூடிய மேம்பட்ட விலங்கு விளக்கு அமைப்பை (Advanced Animal Lighting System – AALS) நிறுவியுள்ளது. அதுபோல, பல்வேறு வகையான மீன்கள் மற்றும் பாலூட்டிகள் மாறும் சூழலில் ஒன்றாக வாழும் நீரின் தரத்தை நிர்வகிக்கும் அனிமல் லைஃப் சப்போர்ட் சிஸ்டமும் (ALSS) நிறுவப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரம்மாண்ட SeaWorld Abudhabi அருங்காட்சியகமானது, ஒரு சிறந்த உலகளாவிய இடமாக நிலைநிறுத்துவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்தி எமிரேட்டின் உண்மையான தனித்துவமான சலுகைகளைக் காட்சிப்படுத்துவதற்கும் ஒரு அற்புதமான புதிய அத்தியாயமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.