ADVERTISEMENT

சவூதி: மக்கா – ரியாத் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து!! 44 பேர் காயம்..!!

Published: 18 Apr 2023, 8:17 PM |
Updated: 18 Apr 2023, 9:18 PM |
Posted By: Menaka

சவுதியில் மக்கா-ரியாத் சாலையில் பயணிகளை ஏற்றிக் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதாக சிவில் டிஃபென்ஸ் மற்றும் சவுதி ரெட் கிரசென்ட்டுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தில் சுமார் 44 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

கிடைத்துள்ள தகவல்களின் படி, அல்-ஹுமியாத் மற்றும் அல்-கஸ்ரா இடையே பயணித்துக் கொண்டிருந்த பேருந்து திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், விபத்து குறித்த தகவல்கள் உடனடியாக தொடர்புடைய துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகவலறிந்து 10 ஆம்புலன்ஸ் குழுக்களும், சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 குழுக்களும் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளன. பின்னர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, காயமடைந்த 44 பயணிகளில் 36 பேர் அல்-ருவைதா, அல்-கஸ்ரா, அஃபிஃப் மற்றும் தால்ம் ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதும், மீதமுள்ள 10 பேருக்கு அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

தற்போது, விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் அதிகாரிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT